முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்னார்குடி நகராட்சிகுட்பட்ட குளங்களில் கலெக்டர் இல.நிர்மல் ராஜ் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2016      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிகுட்பட்ட தாமரைகுளம், நல்லதண்ணீர் குளம், நாகமுடியார்குளம், செட்டி குளம் ஆகிய குளங்களை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மன்னார்குடி நகராட்சிகுட்பட்ட தாமரைகுளத்தின் கரையோர பகுதிகளில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குப்பைகள் அகற்றுவதை பார்வையிட்டு ,பொதுமக்கள் குளங்களின் கரையோரங்களில் குப்பைகள் மற்றும் தனியார் உணவகக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையரை அறிவுறுத்தினார். தொடர்ந்து சட்டுருட்டி வாய்க்காலை பார்வையிட்டு , வாய்க்காலை தூர்வார வேண்டும் எனவும், சாலையோரங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். பின்னர் நல்லத்தண்ணீர் குளம் தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டு குளத்தில் தூர்வாரப்பட்டுள்ள அளவுகள் குறித்து நகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து மேலவாசல் நாகமுடியார்குளம்,செட்டிகுளம் ஆகிய குளங்களையும் , கரையோரப்பகுதிகளையும் பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ட்டி.மோகன்ராஜ் வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகணன், நகராட்சி ஆணையர் இளங்கோவன், வட்டாட்சியர் மலர்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago