சாத்தனூர் அணை திறப்பது குறித்து வரும் 24ந் தேதி கருத்து கேட்பு கூட்டம்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர் ஆதாரத்தை நம்பி மாவட்டத்தில் 19,639 ஏக்கர் பரப்பளவிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 30,537 ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி நடக்கிறது. மேலும் தி.மலை மாவட்டத்தில் 34 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 72 ஏரிகள், சாத்தனூர் அணை தண்ணீரை சார்ந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. எதிர்பாராமல் ஏற்படும் புயல் மழையும் கைக்கொடுக்காததால் சாத்தனூர் அணை நிரம்பவில்லை. சாத்தனூர் அணையின் மொத்த உயரமான 119 அடியில் தற்போது 91.30 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி அதில் தற்போது 2601 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளன. எனவே அணையிலிருந்து இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள் வழியாக நேரடி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூட்டு குடிநீர் திட்டங்கள், அணை பராமரிப்பு, நீர் ஆவியாவதால் போன்றவற்றை கனக்கிட்டு மீதமுள்ள குறைந்த பட்ச அளவுதண்ணீராவதுஏரிகளுக்கு திறந்துவிட வேண்டுமென பாசன விவசாயிகள் தரப்பில் எதிர்பார்க்கின்றனர். மேலும் தற்போதுள்ள நீர் இருப்பின் அடிப்படையில் அதிகபட்சம் 12 முதல் 15 நாட்களுக்கு ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. என கூறப்படுகிறது. எனவே சாகுபடி செய்துள்ள பயிரை காப்பாற்றுவதற்கு அணையின் தண்ணீர் பயன்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் வருகிற 24ந் தேதி மாலை 5 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது அணையின் நீர் இருப்பு, அத்தியாவசிய தேவைக்கு போக மீதமுள்ள தண்ணீரின் அளவு ஏரிகளுக்கு திறப்பதற்கான வாய்ப்பு மற்றும் எப்போது திறக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட பொதுப்பணித்துறை (நீர்வளம்) அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: