முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் வருகிற 26ந் தேதி குடியரசு தினத்தன்று 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம், குடியரசு தினமான 26.01.2017 அன்று நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் பின்வரும் பொருட்கள் விவாதிக்கப்படும்.

 

பொது செலவினம்

 

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், 2017-2018ஆம் நிதி ஆண்டில் பொதுநிதியிலிருந்து மேற்கொள்ளவிருக்கும் ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கான திட்ட அறிக்கையினை குறித்து விவாதித்தல், தனிநபர் கழிப்பறை கட்ட அரசு மான்யம் குறித்து விவாதித்தல், சுகாதாரம் குறித்த திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக அறிவிப்பது குறித்து விவாதித்தல், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல் குறித்து, கிராம நலன்கருதி கழிப்பறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் குழுக்களுக்கு ஒத்துழைப்பு குறித்து உறுப்பினர்களிடம் கோருதல், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல் வாசித்தல், கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் குறித்து விவாதித்தல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விவாதித்தல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் குறித்து விவாதித்தல், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிப்பறைகள் குறித்து விவாதித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான கிராம பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்கக் கோருவது குறித்து விவாதித்தல், 2016-2017ஆம் ஆண்டுக்கான மகாத்மாகாந்தி தேசீய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளில் சாத்தியமான பணிகள் குறித்து விவாதித்தல், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டப் பணிகளில் விவசாயம் மற்றும் தொடர்புடைய 65மூ மற்றும் 40மூ இதரப் பணிகள் குறித்து விவாதித்தல், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் -ஐஐ குறித்து விவாதித்தல், அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற் பயிற்சி கூடம் குறித்து விவாதித்தல், தாய் திட்டம் -2016-2017ம் ஆண்டில் தாய் திட்டம் குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வுத் திட்டம் தொடர்பான அறிக்கைகள் குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிககைகள் குறித்து விவாதித்தல்.

பொதுமக்கள் மற்றும் ஊராட்சி செயலர்களால் கொண்டுவரப்படும் இதர பொருட்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதால், அந்தந்த பகுதிகளில் உள்ள பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கிராமசபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்