ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      திருநெல்வேலி
spectrum annual day

தென்காசி,

 

இலத்தூர் விலக்கு ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 16வது ஆண்டு விழா 27.01.2017 வெள்ளிக்கிழமை அன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

 

பள்ளித்தாளாளர் திருவன். விழாவிற்குத் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். பள்ளிச் செயலாளர் சாந்திதிருவன், இணைச்செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலர் வரவேற்புரை நல்கினார். பள்ளியின் சாதனைகள் பற்றிய ஆண்டறிக்கையை முதல்வர் . இராஜபுஷ்பம் வாசி;த்தார். இருபால் ஆசிரியப் பெருமக்களும் விழா ஏற்பாடுகளைச் சிறப்புறச் செய்திருந்தனர்.

 

கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி பிரதீபா, 2ம் இடம் பெற்ற மாணவி மலர்விழி 3ம் இடம் பெற்ற மாணவி சலோமி என்ற ரேஷ்மா ஆகியோருக்கும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவன் முகேஷ்வாணன் 2ம் இடம் பெற்ற மாணவி அம்முகுட்டி பவித்ரா 3ம் இடம் பெற்ற மாணவன் சண்முக சுந்தரம் மற்றும் தேர்வில் பாட வாரியாக நூறு மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் திருசாய்ராம் டிரஸ்ட்டின் சார்பாக ரொக்கப்பரிசுத் தொகையும் கேடயமும் மேனேஜிங் டிரஸ்டி கிருஷ்ணகுமார் அவர்களால் வழங்கப்பட்டது.

 

மாணவ மாணவியர்களி;ன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தக் கல்வி ஆண்டுக்கான வகுப்பு வாரியான முதல் இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஜெயலெட்சுமி பொன்ரா மருத்துவமனை, அஜிஸ், ரத்தனபெத் முருகன், குணசேகரன், கிருத்திகா ஷைலினி ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியை . பிரேமா நன்றிஉரை வழங்க விழா இனிது நிறைவு பெற்றது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: