மொழி இனம் என்று கூறிக்கொண்டு கூறிக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் தி.மு.க.விற்கு வீர வணக்கநாள் கூட்டம் நடத்த தகுதியோ, தரமோ கிடையாது : அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      சென்னை

இந்தி மொழி எதிர்ப்பு நடத்தி உயிர்நீத்த மொழிபோர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களின் ஆணைக்கிணங்க, ஆவடி எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எம்.பி.மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். ஆவடி நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் முன்னிலை நிகழ்த்தினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., பேசியதாவது:

 

மொழிபோரில் உயிர்நீத்த தியாகிகளுக்காக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த தகுதியான ஒரே இயக்கம் கழகம் மட்டுமே. மொழி, இனம், இன்றி தமிழக நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் பாடுபட்டவர்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள். மொழி இனம் என்று கூறிக்கொண்டு கூறிக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் தி.மு.க.விற்கு வீர வணக்கநாள் கூட்ட தகுதியோ, தரமோ கிடையாது. மக்கள் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் துரோகம் செய்து தன் குடும்ப நலனுக்காக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்திய சுயநலக்கும்பல் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் ஊழல் நடத்தியவர்கள். கருணாநிதி எவ்வழியோ அவ்வழியே ஸ்டாலின் எந்த காலத்திலும் தமிழக முதலமைச்சராக வரமுடியாது. தன் தந்தையே ஸ்டாலின் முதல்வராக வருவதை ஏற்காததை இந்த நாடே அறியும்.

 

அரசியல் போர்வையில் நாட்டை ஏமாற்றும் கருணாநிதியை போல் இன்று ஸ்டாலின் செயல் தலைவர் எனறு தானே பதவி சூட்டிக் கொண்டு அரசியலில் விலாசம் தேடி வருகின்றார்.

 

ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை போட்ட தி.மு.க.&காங்கிரஸ்க்கு பீட்டா தடை போட்டபோது ஆட்சி அதிகாரத்தை பெற்றிருந்த தி.மு.க., காங்கிரஸ் இன்று வரை ஒன்றும் செய்யவில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஜல்லிகட்டு பிரச்சினையில் மத்திய அரசிடம் காட்சி பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்கள். உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டையாக இருந்தது. 17 வருடங்கள் மத்திய, மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் பெற்றிருந்த தி.மு.க. தமிழக நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக நலன்களையும், உரிமைகளையும் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு தமிழினத்திற்கு துரோகம் இழைத்ததுதான் இவர்களது ஆட்சி காலத்தின் சாதனையாகும்.

 

தி.மு.க.வின் அரசின் நிர்வாகமின்மைக்கு காரணம்தான் கச்சத்தீவு தாரை வார்த்துக் கொடுத்தது, முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் முட்டுக்கட்டை, காவேரி நதிநீர் பிரச்சினையில் கள்ளத்தனம் என தமிழகத்தின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் அனைத்திற்கும் காரணம் தி.மு.க. தான் காரணம். இந்த அனைத்து பிரச்சினைகளிலும் இவர்களின் குடும்பம் செழிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதில் அவர்களின் நிர்வாகத்திறன் நூறுசதவீதம் செயல்பட்டிருக்கிறது.

 

ஆனால்

 

தமிழக நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும், ஜீவாதார பிரச்சினைகளுக்காவும் யாரும் குரல் கொடுக்காமலேயே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மத்திய அரசு தடைகளை உடைத்தெரிந்து, உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி பெற்றிருக்கிறார். காவேரி நதிநீர் பங்கீடை அரசிதழில் வெளியிடச் செய்தார்கள். மீனவர்கள் நலன் கருதி கச்சத்தீவு பிரச்சினையில் அதன் உரிமையை கோரியவர், தேசிய நலன், தமிழக நலனில் குரல் கொடுத்து அதற்காக இறுதி வரை போராடி வெற்றி பெற்றவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

 

மற்ற மாநிலங்கள் புரட்சித்தலைவி அவர்கள் ஆட்சியில் பெற்ற உரிமைகள், முனைப்பான திட்டங்களுக்காக பாராட்டியுள்ளார்கள். இதுதான் கழக அரசின் சாதனைகள்.

 

இதுபோன்ற எந்தவித திட்டங்களை தி.மு.க. ஆட்சி செய்ததுண்டா? ஒன்றுமே இல்லை. மத்திய அரசு தமிழக நலன்களை அடகு வைத்த கருணாநிதி மீது போட்ட சர்காரியா கமிஷன் ஊழலுக்காக ஆட்சி இழந்தவர்தான் கருணாநிதி. இப்படி ஊழலுக்காவும், தேச விரோத செயலுக்காகவும் ஆட்சி இழந்த ஒரே கட்சி தி.மு.க.

17 லட்சம் தொண்டர்கள் கொண்ட இயகத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக ராணுவ கட்டுபாட்டுடன் வழி நடத்தினார். இந்தியாவிலேயே மிகப்பெரிய 3வது பெரிய கட்சியாகவும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் அதிக எம்.பி.க்கள் கொண்ட மாபெரும் இயக்கத்தை உருவாக்கியவர் அம்மா அவர்கள். இதனை நாளை கழக பொதுச்செயலாளர் சின்னம்மா தலைமையில் இந்தியாவிலேயே முதன்மை கட்சியாகவும், நாளை நாட்டை வழி நடத்தும் மாபெரும் இயக்கமாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆசியுடன் உருவாகும். இந்த இயக்கத்தை அழிக்கவும், கட்சியில் குழப்பத்தை உருவாக்கவும் கருணாநிதி விட்டு சென்ற பணியை அவரது வாரிசு செயலற்ற தலைவர் ஸ்டாலின் நிகழ்த்த துடிக்கின்றார். ஜல்லிக்கட்டுக்கு முட்டுகட்டைக்கு காரணம் தி.மு.க.வே பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஸ்டாலின் போராட்ட போர்வையில் மாணவ சமுதாயத்தை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்தும் கேவலமான நி¬யில் உள்ளார்.

 

அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் ஆறு கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி ஜல்லிகட்டு அவசர சட்டத்தை, சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை நீக்கிய அம்மா ஆசிபெற்ற முதலமைச்சர் அமைதி, அடக்கம், பொறுமையுடன் தமிழ் தேசியத் தலைவராக எளிமையான வழியில் அறச்செயலில் ஜன நாயக முறையில் வெற்றி கொடி நாட்டியது தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆட்சி. மேலும் மகுடம் சூட்டுகின்ற வகையில் செயல்படாத நாடே பாராட்டுகிறது.

 

தமிழக நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும், ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காகவும் வாழ்ந்த தியாக தீபங்கள் இவர்கள் நல்லாசியுடன் அம்மா ஆட்சி தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ளமுடியாத தி-.மு.க. மற்றும் தீயசக்திகள் சதிகள், சூழ்ச்சிகள் மூலமாக ஆட்சியை வீழ்த்திவிடலாம் என பகற்கனவு கண்டு கபட நாடகத்தை அறங்கேற்றம் செய்து வருகின்றனர்.

 

மாணவ சமுதாயத்தை தூண்டிவிட்டு தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த தி.மு.க. கைக்கூலிகளை ஏவிவிட்டும், தி.மு.க. கட்சிகாரர்கள் மாணவர்கள் நடுவில் ஊடுருவிய தி..மு.க. காரர்கள் சுயரூபத்தை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு முட்டுக்கட்டைக்கு காரணமான தி.மு.கவும். காங்கிரஸ் இன்று மக்களை ஏமாற்ற கபட நாடகம் நடத்தி வருகின்றனர். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் நீலிக்கண்ணீர் வடித்தும் தீயசக்திகள் நடத்திய சதிகளுக்கு விரைவில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

 

தமிழக மக்கள் கருணாநிதி செய்த துரோகத்தை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். தமிழின துரோகி என்று உலக தமிழ் சமுதாயத்தால் சித்தரித்த கருணாநிதியை எந்த தமிழ்சமுதாயமும் எந்த காலத்திலும் மன்னிக்காது. கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இன்று கபட நாடகம் நடிக்கும் தி.மு.க.வின் அட்டூழியத்தை நாட்டுமக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆசிபெற்ற சாதாரண எளியோன் அமைதி, அடக்கம், பொறுமையை தாரக மந்திரமாக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் மூன்று முறை அம்மா அவர்கள்ஆசியுடன் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டு இன்று குடியரசு நாளில் தேசியக் கொடியை ஏற்றுகின்றார். இதுதான் அம்மா அவர்களின் ஆட்சி. சமத்துவ ஜல்லிக்கட்டு என்று சொல்லி வன விலங்குகளுக்கு ஜாதி உணர்வு பேசி அரசியல் பிழைப்பு நடத்தும் கேவலமான செயல் தலைவர் ஸ்டாலின். இவர்கள் கனவு என்றுமே பலிக்காது.

 

மக்கள் நலன் ஒன்ற தன் நலன் என்று பாடுபட்டு வரும் புரட்சித்தலைவி அம்மா ஆசி பெற்ற ஆட்சி மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்கு பொற்கால ஆட்சி வழங்கி வரும் இதனை ஓர் ஸ்டாலின் அல்ல, ஓர் ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் தமிழகத்தில் முதலமைச்சராக முடியாது. என்றுமே அம்மா ஆட்சிதான் தொடரும்.

 

இவ்வாறு கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் சின்னய்யா,, தலைமைக் கழகப் பேச்சாளர் ராமராஜன் காசு.ஜனார்த்தனம், திருவேற்காடு பா.சீனிவாசன், கே.குப்பன், புலவர் ரோஜா, அஜெக்ஸ் பரமசிவம்,மகேஷ்பிரபு பெருமாள், பி.ராஜேந்திரன், என்.அய்யனார், கே.கிருஷ்ணன், கோளடி மகேந்திரன், அண்ணா தொழிற்சங்க முல்லை தயாளன்,முகவை சுந்தரம், எஸ்.தருமலிங்கம், பி.கார்மேகம், ஆர்.சுப்பிரமணி, பேரழகன், பி.வேலாயுதம், கே.கிருஷ்ணன், எஸ்.தருமலிங்கம், கூ.வே.பரமசிவம், திருவொற்றியூர் பால்ராஜ், பாத்திமா பீவி, தாராசிங், கே.குமரன், எஸ்.அப்துல்ரபீக், வி.வி.கிரிதரன், சிவசங்கரன், பரமேஸ்வரன், புரட்சி கோபி, எஸ்.மணிவண்ணன், வெங்கடேசன், ஆதிகேசவன், மார்க்ராஜ், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் ரவி, எம்-.ஆர்.ஜானகிராமன், தங்ககுணசேகரன், ஏ.எம்.சுல்தான்,ஏ.எம்.ஸ்.முஸ்தபா,பாடி நாகராஜ்,, வழக்கறிஞர் நிர்மல்குமார், வழக்கறிஞர் அறிவரசன், முகவை சுந்தரம், பானுமதி சிகாமணி, வழக்கறிஞர் வ்கிிஜ்யய்ரகுமார்,முல்லை சித்தார்த்வெங்கட்,கார்த்தி,

 

அப்துல்காதர்.வினோத்,உட்பட பலர், கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.டி.மைக்கேல்ராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

 

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: