மயிலாடி, அஞ்சுகிராமம், பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      கன்னியாகுமரி
06

கன்னியாகுமரி.

 கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான்  கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சியில், காமராஜர் நகர்  என்ற இடத்தில், முருகேசன் என்பவரின் பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல் மரம் அகற்றும் பணியினையும், மார்த்தாண்டபுரம் வடக்கு என்ற இடத்தை சார்ந்த    ப்பிரமணியன், புஷ்பம், மயிலாடிபுதூர் என்ற இடத்தை சார்ந்த செல்வராஜ் ஆகியோர்களுக்கு தலா ரூ. 2,10,000- மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் நேரில் சென்று பார்iயிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர் அஞ்சுகிராமம் பேரூராட்சியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (2016-17) நிதியின் கீழ், ரூ. 5 இலட்சம் செலவில் ஜேம்ஸ் டவுனில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டிட பணியினையும், ரூ. 12 ஆயிரம் செலவில் ஜேம்ஸ் டவுன் என்ற இடத்தை சார்ந்த நடராஜன் என்பவரின் வீட்டில் தனிநபர் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்ட பணியினையும், சங்கரலிங்கபுரம் என்ற இடத்தை சார்ந்த சிவனனைந்தபெருமாள்,                  கணபதி ஆகியோர்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ், தலா ரூ. 2,10,000- மதிப்பில் கட்டப்பட்டுள்ள பசுமை வீட்டினையும், ஆறுமுகம் என்பவரின் பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல் மரம் அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்து, பின்னர் கன்னியாகுமரி பேரூராட்சியில், ஒற்றையார்விளை என்ற இடத்தை சார்ந்த சீதா தங்கராஜ், என்.முருகன், முத்துபாக்யலட்சுமி ஆகியோர்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ், தலா ரூ. 2,10,000- மதிப்பில் கட்டப்பட்டுள்ள பசுமை  வீடுகளையும், கலைஞர் குடியிருப்பு என்ற இடத்தை சார்ந்த மணி, மரு. கோபால ஆசான் ஆகியோர்களின் பட்டா நிலத்தில்  வளர்ந்துள்ள சீமை கருவேல் மரங்களை அகற்றும் பணிகளையும் கலெக்டர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) முத்துகுமார்,  பேரூராட்சி செயல் அலுவலர்கள் லௌலின் மேபா (மயிலாடி), திருமலைகுமார் (அஞ்சுகிராமம்), சங்கர நாராயணன் (கன்னியாகுமரி) மற்றும் உதவி பொறியாளர் ஆர்.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: