முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவல்லிக்கேணியில் தங்கும் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட விடுதி மேலாளர் உட்பட 9 பேர் கைது

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      சென்னை

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணைய ர்.ஜார்ஜ் உத்தரவிட்டதன் பேரில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர். அதன்பேரில், டி-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், திருவல்லிக்கேணி, தகுதிகான் தெருவில் உள்ள காலிபர் மேன்ஷன் என்ற தங்கும் விடுதியில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.தமிழ்செல்வன், வ/56, , 2.இம்தியாஸ், வ/32, , மண்ணடி,  3.அசாருதீன், வ/31, , ஏழுகிணறு, 4.தனசேகர், வ/35, பழைய வண்ணாரப்பேட்டை, 5.ரவி, வ/43, பழைய வண்ணாரப்பேட்டை, 6.தியாகராஜன், வ/42, திருவொற்றியூர், 7.நாகராஜன், வ/42, திருவான்மியூர், 8.முகமது அலி, வ/44, ராயபுரம், 9.முகமது ரபீக், வ/48, ராயபுரம் ஆகிய 9 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேற்படி நபர்களிடமிருந்து சூதாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட பணம் ரூ.46,365/- மற்றும் சீட்டுக்கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட தமிழ்செல்வன் என்பவர் மேற்படி தங்கும் விடுதியின் மேலாளர் என்பது தெரியவந்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago