கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய ஸ்மார்ட்டு கார்டுகள் வழங்கும் பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி
1

புதிய மின்னனு குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் துவக்கி வைத்ததையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பென்னேஸ்வரமடம் கிராமத்தில் புதிய ஸ்மார்டு கார்டு வழங்கும் பணியை கலெக்டர் சி.கதிரவன் நேற்று (01.04.2017) துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இணை பதிவாளர் பாண்டியன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து கலெக்டர் பேசும்போது:தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் (01.04.2017) புதிய ஸ்மார்டு கார்டு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்ததையடுத்து நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 4 லட்சத்து 54 ஆயிரத்து 259 குடும்ப அட்டைகளில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 200 புதிய ஸ்மார்ட்டு கார்டுகள் அச்சடிக்கப்பட்டு அதில் 24 ஆயிரத்து 250 புதிய ஸ்மார்ட்டு கார்டுகள் வரபெற்றுள்ளன. மற்ற கார்டுகள் படிபடியாக வரபெறும். ஸ்மார்ட்டு கார்டு பெற பொதுமக்கள் அவரசபட தேவையில்லை. குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் தங்களது செல்போன் எண்களை விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்துள்ளதால் ஸ்மார்ட்டு கார்டு தயார் ஆனதும் செல்போன் எண்ணிற்;கு ஒரு ஓ.டி.பி. எண் வரும். இந்த ஒ.டி.பி. எண் வந்த பிறது 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளுக்கு சென்று ஸ்மார்ட்டு கார்டு பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட்டு கார்டு தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் புதிய ஸ்மார்ட்டு கார்டு கிடைக்கும் வரை பழைய குடும்ப அட்டைகளை பயன்படுத்தி 2 மாதங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்டு கார்டில் திருத்தம் மேற்கொள்ள இ - சேவை மையத்திற்கு சென்று திருத்தம் செய்துக்கொள்ளலாம். அல்லது ஸ்மார்ட்டு போனிலிம் ஆப். டவுன்லோடு செய்து ஓ.டி.பி. எண் மூலம் திருத்தம் செய்துக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இன்று பென்னேஸ்வர மடம் நியாய விலைகடைக்குட்பட்ட 439 - குடும்ப அட்டைதாரர்களில் முதற் கட்டமாக 190 ஸ்மார்ட்டு கார்டு வர பெற்று இன்று வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சி.கதிரவன் இ.ஆ.ப. அவர்கள் பேசினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ( பொ) எச்.ரகமதுல்லா கான், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், துணை பதிவாளர்கள்; வி.எம்.ரவிச்சந்திரன், பாலமுருகன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் மோகன், கே.ஏ.மதியழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர், வட்டாட்சியர் மோகனசுந்தரம், தனி வட்டாட்சியர் முருகன், சந்தாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் என்.ராமசாமி, மீனவர் கூட்டுறவ சங்க தலைவர் டி.எம்.தங்கமணி, ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: