கள்ளக்காதலியை கொன்ற தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      சென்னை

மதுரவாயல் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை கொன்ற தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\

கள்ளக்காதல் 
மதுரவாயல், சீமாத்தம்மன் நகர் நேருதெருவில் வசித்து வருபவர் முருகராஜ். கட்டிட தொழிலாளி சிவகாசியை சேர்ந்த அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்த அன்னபூர்ணத்துக்கும் (வயது31) கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தனர். முருகராஜூக்கு குடிப்பழக்கம் உண்டு. மேலும் அன்னபூர்ணத்தின் நடத்தையிலும் சந்தேகம் அடைந்தார்.

இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்கள் அதேபகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் குடியேற திட்டமிட்டு இருந்தனர். நேற்று முன் தீனம் இரவு அந்த வீட்டை சுத்தப்படுத்தி விட்டு அங்கேயே இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். ஆத்திரம் அடங்காத முருகராஜ் நேற்று அதிகாலையில் எழுந்து தூங்கிக் கொண்டு இருந்த அன்னபூர்ணத்தின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார்.

பின்னர் அவர் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: