கடலூர் வட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 129 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

புதன்கிழமை, 7 ஜூன் 2017      கடலூர்
cuddalure collector jamapanthi

கடலூர் மாவட்டத்தில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   நடைபெற்ற  ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையான கோரிக்கைகள் அடங்கிய 355 மனுக்களைப் பெற்றார்.

 ஜமாபந்தி

மேலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் 1426 பசலி ஆண்டு நிலவரி கணக்கு முடிப்பு பற்றிய ஆய்வு (ஜமாபந்தி) 25.05.2017 முதல் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், பண்ருட்டி வட்டத்தில் கடலூர் சார் ஆட்சியர், சிதம்பரம் வட்டத்தில் கடலூர் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்), புவனகிரி வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர், விருத்தாச்சலம் வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், திட்டக்குடி வட்டத்தில் கடலூர் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்), வேப்பூர் வட்டத்தில் விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகிறார்கள். மேலும், 25.05.2017 முதல் சில தாலுக்காவில் 06.06.2017 வரையிலும் சில தாலுக்காவில் 09.06.2017 வரையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.ஜமாபந்தியில் மஞ்சக்குப்பம் குறுவட்டம் செல்லங்குப்பம், கடலூர் முதுநகர் (முனிசிபல்) திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், வில்வராயநத்தம், உதரமாணிக்கம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், கோண்டூர் (முனிசிபல்), கேண்டூர் (முனிசிபல் அல்லாதது), வெளிச்செம்மண்டலம், கரையேறவிட்டகுப்பம் (முனிசிபல்), கரையேறவிட்டகுப்பம் (முனிசிபல் அல்லாதது) ஆகிய கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து 355 கோரிக்கை மனுக்களை கலெக்டர்  பெற்று அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காண்பதற்காக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை அளித்தார்.

 நலத்திட்ட உதவிகள்

இன்றைய தினம் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் விழாவில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,கடலூர் மாவட்டத்தில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 25.5.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 156 மனுக்களும், 26.05.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 159 மனுக்களும், 29.05.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 133 மனுக்களும், 30.05.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 180 மனுக்களும், 31.05.2017 அன்று நடைபெற்ற ஐமாபந்தியில் 130 மனுக்களும், 01.06.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 165 மனுக்களும், 02.06.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 113 மனுக்களும், 05.06.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 134 மனுக்களும், இன்று 06.06.2017 நடைபெற்ற ஜமாபந்தியில் 355 மனுக்களும் என ஆகமொத்தம் 1525 மனுக்கள் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  அவர்களால் பெறப்பட்டது. இவற்றில் பட்டா மாற்றம் கோரி 607 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கோரி 683 மனுக்களும், குடும்ப அட்டை கோரி 13 மனுக்களும், இலவச வீட்டுமனை கோரி 122 மனுக்களும் இதர கோரிக்கைகள் அடங்கி 100 மனுக்களும் என ஆகமொத்தம் 1525 மனுக்கள் பெறப்பட்டதில் 25.05.2017 முதல் 05.06.2017 வரை 88 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 14 நபர்களுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 29 நபர்களுக்கு ஏரிகளில் இலவவசமாக வண்டல் மண் எடுப்பதற்கு பர்மிட் சான்றிதழ்களையும், இன்றைய தினம் நடைபெற்ற ஜமாபந்தியில் 62 நபர்களுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 65 நபர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 2 நபர்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரங்களையும் என ஆகமொத்தம் 258 நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களில் 129 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு 62 நபர்களுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 65 நபர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 2 நபர்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரங்களையும் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   வழங்கினார்.

பலர் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (நிலஅளவை) எஸ்.ரவி, கடலூர் வருவாய் வட்டாட்சியர் பி.பாலமுருகன், வட்டாட்சியர் (ச.பா.தி) எஸ்.சிவா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து