பல்லடத்தில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்டக் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      திருப்பூர்
30

பல்லடத்தில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்டக் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கரைபுதூர் ஊராட்சி பகுதியில்,ஊராக வளர்ச்சித்துறை மூலம் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை திருப்பூர் மாவட்டக் கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வுசெய்தார்.

இந்த ஆய்வின்போது கரைப்புதூர் ஊராட்சி,மகாலட்சுமி நகர்,தண்ணீர்பந்தல்,அருள்புரம் உள்ளிட்ட அனைத்துபகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டக் கலெக்டர் டெங்கு ஒழிப்பிற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். தூய்மைபடுத்தும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள்,என்.சி.சி.மாணவர்களையும் இணைத்துக் கொண்டு செயல்படக் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக டெங்கு ஒழிப்பு குறித்தும் மற்றும் பொது சுகாதாரம் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பல்லடம் எம்.எல்.ஏ.கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் துவக்கிவைத்தனர்.இதில் திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன் குமார்,ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாலசுப்பிரமணி,வட்டார வளர்ச்சி அதிகாரி சண்முகவதி,ஊராட்சி செயலர் காந்திராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து