சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு மீஞ்சூர் ஜெயின் கல்லூரி மாணவர்கள் இரத்ததானம்

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      சென்னை
Ponneri 2017 12 14

பொன்னேரி அடுத்த மீஞ்சூர் ஸ்ரீசந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம்,கருணா கிளப்,யூத் ரெட் கிராஸ்,ரோட்டராக்ட் கிளப்,எச்.டி.எப்.சி வங்கி ஆகிய அமைப்புகளின் சார்பாக இரத்ததான முகாம் நடைப்பெற்றது.சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு ஜெயின் கல்லூரி மாணவர்கள் இரத்ததானம் அளித்தனர்.

பாராட்டு

இதற்கான துவக்க நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் லலித்குமார் ஓ.ஜெயின்,கல்லூரி ஆலோசகர் அமர்சந்த்,கல்லூரி முதல்வர் மேஜர் எம்.வெங்கட்ரமணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர்.கல்லூரி செயலர் லலித்குமார் பேசும்போது இந்தக்கல்லூரி துவங்கி பல ஆண்டுகளாய் மாணவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு இரத்ததானம் அளித்து வருகின்றனர்.சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு விபத்தின் காரணமாகவும் பல்வேறு நோய்களின் காரணமாகவும் நோயாளிகளுக்கு இரத்தம் தேவைப்படுகின்றது.சிகிச்சைக்கான இரத்தம் இல்லாமல் நிறைய பேர் பல நேரங்களில் தவிக்கின்றனர்.

உயிரை காப்பாற்ற போராடுகின்றனர்.ரத்தத்தினை விலை கொடுத்து வாங்க முடியாத எவ்வளவோ ஏழைகளும் அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர்.அதனால்தான் எங்கள் கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு இரத்ததானம் வழங்குவதோடு தேவைப்படும்போது நேரிடையாகவும் மருத்துவமனைகளுக்கு சென்று இரத்தம் கொடுத்து பல உயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.இந்த உதவியினை செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்,நன்றிகள் எனக்கூறினார்.

இந்த முகாமில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சி.மோகன், சி.முருகன், எஸ்.ராஜேஸ்வரி, குமரேசன், திருநெல்லை,கீதா,நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள்,ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் இரத்ததானம் செய்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து