கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நிறைவு விழா

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      தூத்துக்குடி
state level chesscompetition 2017 12 27

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான மாநில அளவிலான 14 மற்றும் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கான சதுரங்க போட்டிகள்; கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சதுரங்க போட்டிகள்

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கான  பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. இப்பரிசளிப்பு விழாவில், இந்தியா ரயில்வேயை சேர்ந்த சர்வதேச க்ராண்ட் மாஸ்டர் ஷியாம் நிகில் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் சண்முகவேல் தலைமை வகித்தார்.இப்போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ  மாணவியர்கள் பங்கேற்றனர். போட்டியின் முடிவில் 9 சுற்றுகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் மேற்கண்ட இரு பிரிவுகளில்;  முதல் 15 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையாக ருபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம பகிர்ந்தளிக்கபட்டது. பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் கே.ஆர். அருணாச்சலம்கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் மற்றும் முதல்வர் முனைவர் சண்முகவேல் ஆகியோரின் வழிகாட்டுதலின் பெயரில், உடற்கல்வி இயக்குனர்கள் ரகு கீதா மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து