முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரம்பரியம் மிக்க நமது கலை மற்றும் பண்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே பேச்சு

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      சேலம்
Image Unavailable

சேலம் மண்டல கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெற்ற மார்கழி இசை விழாவினை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தளவாய்ப்பட்டி கலை பண்பாட்டு வளாகத்தில் நேற்று (10.01.2018) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது.=

இசை மற்றும் நடன கலை

இசை மற்றும் நடன கலைகளை பயிற்றுவிக்கும் வகையில் கலை பண்பாட்டுத்துறை சார்பாக தமிழகத்தில் 4 இடங்களில் இசைக்கல்லூரிகளும் 17 மாவட்டங்களில் இசைப்பள்ளிகளும் நடத்தப்படுகிறது. சேலம் , கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்ட இசைப்பள்ளி மாணவர்களும் சேலத்தைச் சேர்ந்த கலை ஆர்வலர்களும் நமது இசை மற்றும் நடனங்களை கண்டு களிக்கும் வகையில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்தப்படும் மார்கழி இசை விழாவைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மார்கழி மாதம் என்பது புனிதமான மாதமாக போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் சிவன் , பெருமாள் ஆலயங்கள் தோறும் காலை முதலே இசை ஒலிக்கத் தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் மார்கழி இசை விழா உலக புகழ் பெற்றது. தமிழக அரசின் முயற்சியால் அண்மையில் யுனஸ்கோ சென்னையை இசை நகரமாக அறிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு கலை பண்பாட்டுத்துறையின் ஏழு மண்டலங்களிலும் மார்கழி இசை விழா நடத்த அரசின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதன்படி சேலத்தில் இன்று மார்கழி இசைவிழா நடத்தப்படுகிறது.

ஊக்குவிக்க வேண்டும்

இந்த இசை விழாவில் தேவாரம், குச்சுபுடி நடனம், வாய்ப்பாட்டு, நாதசுரம், சிறப்பு தவில் இசை ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த வந்துள்ள தமிழகத்தின் புகழ் பெற்ற கலைஞர்களை போன்று சேலம் மாவட்டத்தை சார்ந்த இசைப்பள்ளி மாணவர்களும் இசை மற்றும் நடனத்தில் புகழ் பெற்று விளங்க வேண்டும். பாரம்பரியம் மிக்க நமது கலை மற்றும் பண்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர் பா.ஹேமநாதன், இசைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கரராமன் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து