முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப நலத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவர்கள் மற்றும் செலிலியர்களுக்கு கேடயங்கள் கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்

புதன்கிழமை, 21 மார்ச் 2018      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதாரகுழுக் கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நேற்று ( 21.03.2018) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.அசோக்குமார், அரசு தலைமை மருத்துவமணை உள்ளிருப்பு மருத்துவர் பரமசிவம், துணை இயக்குநர் ( சுகாதார பணிகள்) மரு.பிரியாராஜ், துணை இயக்குநர் ( மருத்துவம் மற்றும் குடும்பநலம்) மரு.முல்லைசாரதி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

கேடயம் பரிசு

 

பின்பு கலெக்டர் உரையாற்றும் போது: மருத்துவமணைகளுக்கு வரும் வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமணையில் பிரசவ தாய்மார்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்து நன்கு பராமரிக்க வேண்டும். அதேபோல மருத்துவமணையில் சுகாதாரமான குடிநீர், வழங்க வேண்டும். மருத்துவமணைசுற்றி மற்றும் மருத்துவமணையில் சுகாதாரமாக தூய்மை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் . பொதுபணித்துறை சார்பில் புதியதாக கட்டப்பட்டுவரும் கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்க கூடிய ரூ. 12 ஆயிரம் நிதி உரிய காலத்திற்குள் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என மருத்துவர்களுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து கலெக்டர் 2015-16 ஆண்டு குடும்ப நலத்துறையின் மூலம் குடும்ப நல முறைகளை சிறப்பான செயலாக்கம் செய்த வகையில் ஓசூர் அரசு மருத்துவமணை மருத்துவர்கள்; சிலம்பரசன், மரு.நந்தினி, காவேரிபட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுதா, பாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சாந்தினி, சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் இளம்பரிதி, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவ மணை செவிலியர் ஆரோக்கிய மேரி, ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களும், மேலும் குடும்ப நலத்துறையில் 30- ஆண்டுகள் சிறப்பான பணிபுரிந்து ஒய்வுபெற்ற வட்டார சுகாதார புள்ளியாளர் முருகன், மற்றும் கெலமங்கலம் வட்டாரத்தை சேர்ந்த உயர் பிறப்பு தாய்மார்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றிய செல்வமணி, கிரிஜா ஆகியோருக்கு தங்க காசுகளை கலெக்டர் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து