காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நெல்லையில் அதிமுக உண்ணாவிரதம்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      திருநெல்வேலி
AIADMK fasting in the rice demanding the formation of Kaveri Management Board

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக அதிமுக சார்பில் நெல்லையில் உண்ணாவிரதம்நடைபெற்றது .  பாளையங்கோட்டை நேருஜி சிறுவர் கலையரங்கின் முன்புறம் நடைபெற்ற உண்ணா விரத போராட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன் மாநில அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன் அமைச்சர் ராஜலெட்சுமி,எம்.பி., பிரபாகரன் . மற்றும் எம்.எல்.ஏ க்கள் ராதாபுரம் இன்பதுரை, தென்காசி செல்வமோகன்தாஸ், வாசுதேவநல்லுர் மனோகரன்,  அம்பை சட்டமன்ற உறுப்பினர் முருகையாபாண்டியன். முன்னாள் பாளை சட்டமன்ற உறுப்பினர்கள்  தர்மலிங்கம், சுப்பையாபாண்டியன் , முத்துசெல்வி.,  முன்னாள் நகர செயலாளர் சங்கை கண்ணன் . முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், மாவட்ட பொருளாளர் தச்சை கணேஷராஜா, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு, கேபிள் சுப்பையா, தங்கபிச்சையா நெல்லை பகுதி செயலாளர் மோகன்,  மற்றும் நல்லபெருமாள். ஆட்டோ பாலு, அப்துல்சமது,   சிறுபான்மை பிரிவு செயலாளர் கேபிரியல் ஜெபராஜன்,  மற்றும் திரளான நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து