முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்ட கழகம் சார்பில் 71 ஜோடிகளுக்கு திருமணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான கால்கோள் நடும் விழா

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2019      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வரும் 3ம் தேதி  காலையில் லெட்சுமிபுரம் ருக்மணியம்மாள் திருமண மண்டபத்தில்  கட்டில், பீரோ உள்ளிட்ட 71 வகை சீர்வரிசைகளை வழங்கி 71க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணமும், மாலையில் லெட்சுமிபுரம் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா திடலில் 1 லட்சத்து 71 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்விழாவிற்கான கால்கோல் நடும் விழா திருமண மண்டபம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் இடத்தில்  நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலையில் மணமக்களுக்கான பட்டுவேஷ்டி மற்றும் பட்டுசேலையை பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் டி.டி.சிவக்குமார், மாவட்ட பொருளாளர் செல்லமுத்து, ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், போடி சற்குணம், ஆண்டிபட்டி லோகிராஜன், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, சின்னமனூர் விமலேஸ்வரன், நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, கூடலூர் சோலைராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தேனி முருகேசன் பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் தீபன்சக்கரவர்த்தி, பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து