முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி அருகே ஹெல்மெட் விழிப்புணர்வு: இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      தேனி
Image Unavailable

போடி, -     போடி அருகே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
     போடி பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட சில இருசக்கர வாகன விபத்துக்களில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யததால் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து இப்பகுதியில் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சிலமலை கிராமத்தில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நடத்தப்பட்டது. போடி காவல் துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் போலீஸார் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
     மேலும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிப்பது காவல்துறையின் நோக்கமல்ல, போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தவே அபராதம் விதிக்கப்படுவதாக விளக்கினர். விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும்போது அவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மற்றும் பிற வாகனங்களை ஓட்டுபவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
     நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிவந்த முதியவர் உள்ளிட்ட சிலருக்கு டி.எஸ்.பி. இலவசமாக ஹெல்மெட் வழங்கி அறிவுறை வழங்கினார். நிகழ்ச்சியில் போடி தாலுகா காவல்நிலைய போலீஸார் பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து