கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      திண்டுக்கல்
4 kodaikanal dog festival

கொடைக்கானல்  கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு கோப்பைகளை ஆர்டிஓ சுரேந்திரன் வழங்கினார்.
 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வரும் குளுகுளு சீசனை ஒட்டி கோடை விழா கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியது. இதனைையொட்டி தினசரி கலைநிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக  நேற்று கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக நாய்கள் கண்காட்சி பிரையன்ட் பூங்காவில் நடைபெற்றது.
 இக்கண்காட்சியில் சைபீரியன் ஹஸ்கி, கிரேட்டேன், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்டு, பக். பொமரேனியன், பீகில்ஸ்,சிசு ஜெர்மன் ஷெப்பர்ட் உள்பட பணிரெண்டு ரகங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. இதில் வயது,திறமை, மோப்ப சக்தி, கீழ்படிதல் போன்றவற்றின் அடிப்படையில ஆறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் தலா 3 முதல் பரிசுகளும் மற்றும் சிறப்பு பரிசுகளும் ஒட்டு மொத்த சாம்பியன் பரிசும் வழங்கப்பட்டன.
 இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கொடைக்கானலை சேர்ந்த இசைத்தமிழ் சிங்காரம் என்பவரின் சைபீரியன் அஸ்கி என்ற ரக நாய் பெற்றது. ஏ பிரிவு போட்டியில் ஜெர்மன் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்  உரிமையாளர் சுரேஷ் ராஜாவுக்கு  முதல் பரிசும் ,பி பிரிவில் பாக்சர் ரக நாய் உரிமையாளர் அருணுக்கு முதல் பரிசும், சி பிரிவில் ரக நாய் உரிமையாளர் வெங்கடேசுக்கும் முதல் பரிசுகள் வழங்கப்பட்டன. டி பிரிவில் தமிழக நாய் இனமான  அன்பு என்பவரின் கண்ணீராக நாய்க்கு முதல் பரிசு,  இ பிரிவில் மதுரையைச் சேர்ந்த அலெக்ஸ் மீனா என்பவரின் லாப்ரடார் ரக நாய்க்கு முதல் பரிசு , எஃப் பிரிவில்  ராஜன் என்பவரின் லாப்ரடார் வகை நாய்க்கு முதல் பரிசு வழங்கப்பட்டது . போட்டிகளைத் தொடர்ந்து வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கும்  பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு கால்நடை உதவி இயக்குனர் ஹக்கீம் தலைமை வகித்தார். மற்றொரு உதவி இயக்குனர் சத்யநாராயணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆர்டிஓ சுரேந்திரன் மன்னவனூர் உரோம ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி ராஜேந்திரன் சுற்றுலா அலுவலர் உமா தேவி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுக் கோப்பைகளை வழங்கினர்.
 இந்நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள் அருண், பிரபு, வில்சன் சங்கர விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  அதனை தொடர்ந்து பங்கேற்ற அனைத்து நாய்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அத்துடன் வனவிலங்கு காப்பாளர்களின் சார்பாக அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசியும் போடப்பட்டது.
 நாய்கள் கண்காட்சியினை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்ததுடன் நாய்களுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடந்த நாய்கள் கண்காட்சியில் பரிசு பெற்ற நாய்களும் அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து