முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப். 27 திருப்பதி பிரம்மோற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி : தேவஸ்தானம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2022      ஆன்மிகம்
Tirupati 2022 02 26

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ம்தேதி நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் சுப்பா ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக பிரமாண்டமாக பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்

ஆனால் கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் பக்தர்கள் இன்றி கோயிலுக்குள் நடந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி சிறப்பாக நடத்தப்படும்.

இதற்காக மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும். எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் அதற்கேற்ப முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும். வரும் செப்டம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி 9 நாட்கள் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 1ம்தேதி கருட சேவை நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து