முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் கிராம மக்கள் 40 பேரை சுட்டுக்கொன்ற கும்பல்

புதன்கிழமை, 22 மே 2024      உலகம்
Nigeria 2024-05-22

நைஜர், நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அங்கு நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 40 பேர் பலியானார்கள். 

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட-மத்திய பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் அடிக்கடி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் வேஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் நள்ளிரவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கும்பல் புகுந்தது. அவர்கள் வாசின் ஜுராக் சமூகத்தில் உள்ள கிராம மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. 

இந்த பிராந்தியத்தில் நாடோடி மேய்ப்பர்கள் மற்றும் கிராம விவசாயிகளுக்கு இடையே நீர், நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இதில் இருதரப்புக்கு மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்களும் நடந்தன. 

இதுபோன்ற தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து