முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருக்கிறது : மல்லிகார்ஜூன கார்கே பேட்டி

புதன்கிழமை, 22 மே 2024      இந்தியா
Mallikarjuna-Karke 2023 02

Source: provided

புதுடில்லி : பிரியங்கா, ராகுல் சொத்துக்கள். எங்கள் சொத்துக்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்ய முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு கார்கே அளித்த பேட்டி: கூட்டணிக்காக குறைந்த இடங்களில் போட்டியிட காங்கிரஸ் சமரசம் செய்தது. மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் இன்டியா கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன.

தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. பிரியங்கா, ராகுல் எங்கள் சொத்துக்கள். எங்கள் சொத்துக்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்ய முடியாது. இதனால் பிரியங்கா தேர்தலில் போட்டியிடவில்லை. இவ்வாறு கார்கே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து