முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று:தமிழக விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

வியாழக்கிழமை, 23 மே 2024      தமிழகம்
Corona-virus 2023 08 19

கோவை, சிங்கப்பூரில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு, சிங்கப்பூர் மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது. சிங்கப்பூரிலிருந்து வாரத்திற்கு ஐந்து நாட்களும், ஷார்ஜாவிலிருந்து வாரத்திற்கு 7 நாட்களும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் தினசரி பதிவாகும் கொரோனா தொற்று எண்ணிக்கை வழக்கமான அளவைவிட அதிகமாக இருப்பதால், அங்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மீண்டும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, காய்ச்சல் உள்ளிட்டவை கண்டறிவதற்கான சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து கோவை வரும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து