முக்கிய செய்திகள்
Chippiparai | பங்களாக்களில் வளர்க்கப்படும் நாட்டு நாய்கள்|நாயின் அருமை பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை
21 hours 28 min ago
தனது 3 குட்டிகளுக்கு பயிற்சியளிக்கும் தாய் புலி...!
3 days 14 hours ago
உலகின் அழகிய 5 கண்டுபிடிப்புகள் | விரைவில் வருகிறது டிஜிட்டல் யுகம்...
3 days 14 hours ago
இந்தியாவில் பார்க்க வேண்டிய 5 பிரபலமாகாத அற்புத சுற்றுலா தளங்கள்
3 days 14 hours ago
டூயட் நடனம் ஆடிய மகாராஷ்டிரா எம்பிக்கள்...!
3 days 21 hours ago
மாணவர்ளின் ஜீப்பை பந்தாடிய யானை...!
4 days 16 hours ago
எரிமலை விளிம்புக்குள் பறந்து திரும்பிய விமானி...!
4 days 16 hours ago
வரவேற்புக்கு பொக்லைனில் வந்த புதுமணத் தம்பதி டிரைவர் செய்த தவறால் புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த கதி.!
4 days 16 hours ago
வெள்ளை படுதல் குணமாக 5 எளிய மருத்துவ முறைகள்|Vellai Paduthal 5 Tips | P. புஷ்பமாரி சித்த மருத்துவர்
4 days 21 hours ago
முழங்கால் அளவு மழை நீரில் மிதந்த அரசு மருத்துவமனை...!
5 days 15 hours ago
சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் மாடல் அழகியின் வீடியோ...!
5 days 15 hours ago
காட்டெருமையை வம்புக்கு இழுத்த காண்டாமிருகம்...!
5 days 15 hours ago
6 பெண் எம்பிக்களுடன் சசிதரூர் செல்பி...!
5 days 15 hours ago
மலைப்பாம்பை மகனுடன் சேர்ந்து மீட்ட பெண்...!
5 days 15 hours ago
கம்பு 10 மருத்துவ குணங்கள் | Pearl Millet 12 health benefits| ரவிச்சந்திரன் சித்த மருத்துவர்
6 days 21 hours ago
ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்து விட்டால்..

உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும். தண்ணீரிலிருந்து எடுத்த ஸ்மார்ட்போனை ஆன் செய்யாமல், முதலில் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு மேல் உங்கள் ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப்-ஆகவில்லை என்றால் பவர் பட்டனை அழுத்திப் பிடித்தால் போதும் உடனே சுவிட்ச் ஆப்-ஆகிவிடும்.குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது. ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும் போது சார்ஜ் செய்தல் கூடாது, ஒருவேலை நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.சிலர் ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க மைக்ரோவேவ் ஓவன் சாதனம், அல்லது நெருப்பு போன்றவற்றை பயன்படுத்துவார்கள், அவ்வாறு செய்யக்கூடாது இதுவும் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும். அடுத்து போனில் இருக்கும் எஸ்டி கார்டு, பேட்டரி, சிம் போன்றவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க முதலில் சூரியஒளியைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது, சூரியஒளி வெப்பத்தால் உடனே ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை உலர்த்த முடியும். எப்படியிருந்தாலும் உங்கள் செல்போனை ஆன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் உடனடியாக அதற்கான சர்வீஸ் செண்டரில் கொடுத்துவிடுவது சிறந்தது.

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடலாமா

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகை நீங்கும். தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம் இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். கண் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம். சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு தொண்டைப் புண்ணும் குணமாகும்.

உலகின் முதல் ஸ்பேஸ் ஹோட்டல்

ஓரியன் ஸ்பேன் எனும்  அமெரிக்க நிறுவனம் கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலகின் முதல் சொகுசு  விண்வெளி (ஸ்பேஸ்) ஹோட்டலை அறிமுகப்படுத்தியது. இந்த சொகுசு விடுதிக்கு அரோரா நிலையம் என பெயரிடப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஹோட்டல் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் எனவும், முதல் விருந்தினர் குழு 2022 ஆம் ஆண்டு அனுப்பப்படுவார்கள் எனவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சொகுசு ஆகாய விடுதியில் ஒரே நேரத்தில் ஆறு பேர் மட்டுமே தங்க முடியும். 12 நாட்கள் இந்த விடுதியில் தங்குவதற்கு ஒருவருக்கு 9.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 71.33 கோடி முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்ன ஸ்பேஸ் ஓட்டல் போகத் தயாரா.

அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ள டிஜிட்டல் டைரி

டைரி எனப்படும் நாட்குறிப்பு உலக வரலாற்றில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கிய ஒன்று என்று சொல்லலாம். காகிதங்களின் காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டைரிகளில் தங்களது அன்றாடங்களை யார் இப்போது எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு எழுத விரும்புபவர்களுக்கு வந்து விட்டது டிஜிட்டல் டைரி. டிஜிட்டல் டைரிகளில் நீங்கள் உங்கள் போட்டோ அல்லது வீடியோவையும் இணைக்க இயலும் அதோடு அதை பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்தும் வைக்கவும்  முடியும் இதன் மூலன் நம்மை ஆராய்ச்சு செய்யும் கண்களிடமிருந்து தப்பிக்க இயலும். முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி தானே...

1200 ஆண்டுகள் பழமையான மம்மி உடல் தோண்டி எடுப்பு

பெரு நாட்டில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால், 800 முதல் 1,200 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்ட மிகவும் பக்குவமாகப் பதப்படுத்தப்பட்ட ஒரு மம்மி உடல் நாட்டின் தலைநகரான லிமாவிற்கு அருகில் உள்ள இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதில் வினோதம் என்னவென்றால், இந்த மம்மி இன் உடல் முழுவதும் கயிறுகளால் இறுக்கி கட்டப்பட்டுள்ளது. அதன் முகத்தை அந்த மம்மி அதன் கைகளால் மூடியுள்ளது. இது தெற்கு பெருவியன் இறுதிச் சடங்கு முறை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.சான் மார்கோஸின் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டு பிடித்துள்ளனர். இது 15 ஆம் நூற்றாண்டில் பெருவின் சிறந்த அறியப்பட்ட மச்சு பிச்சு கோட்டையை நிறுவிய இன்கா நாகரிகத்திற்கு முந்தையது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அம்பானி வீட்டில் 180 ஆண்டுகள் பழமையான 2 மரங்கள் : விலை ரூ.84 லட்சம்

180 ஆண்டுகள் பழமையான மரங்கள் ஸ்பெயினில் இருந்து ஆந்திராவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு ஆந்திராவில் உள்ள கவுதம் நர்சரியில் வைத்து வளர்க்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் ஜாம்நகர் பங்களாவில் இந்த 2 அரிய வகை ஆலிவ் மரங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. 180 ஆண்டுகள் பழமையான ஆலிவ் மரங்களின் தாவரவியல் பெயர் Olea Europaea.3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினில் இருந்து கௌதமி நர்சரிக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இந்த இரண்டு மரங்களும் நவம்பர் 24 அன்று ஆந்திராவில் இருந்து ஒரே டிரக்கில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. இந்த மரங்கள் குஜராத்தில் இலக்கை அடைய 5 நாட்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரங்களின் விலை விவரங்களை தெரிவிக்க கவுதம் நர்சரி மறுத்து விட்ட போதிலும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ.84 லட்சம் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தில் மூழ்கியும் அணையாமல் தீபம் எரியும் கோயில்

நாமக்கல் மாவட்டம்  மோகனூர். இங்கே, ஊருக்குள், காவிரிக் கரையோரத்தில் உள்ளது ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் அப்படி என்ன சிறப்பு. எத்தனையோ உள்ளன. பாடல் பெற்ற தலம். திருக்கார்த்திகை தீபத் திருவிழா இங்கே விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காசிக்கு நிகரான தலம், திருவண்ணாமலைக்கு நிகரான தலம் எனப் போற்றப்படுகிறது. சுவாமி முன் உள்ள தீபம் ஆடாமல் அசையாமல் எரிவதாலேயே அவருக்கு அசலதீபேஸ்வரர் என்ற பெயர் வந்தது. ஒரு முறை காவிரியில் வெள்ளம் வந்து கோயில் மூழ்கிய போதும் தீபம் மட்டும் விடாமல் எரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுவது இதன் கூடுதல் சிறப்பு.

உறங்கும் போது எப்படி படுக்க வேண்டும்

முந்தைய இரவு உறக்கத்தைப் பொருத்தே அடுத்த நாளின் செயல்திறன் நிர்ணயிக்கப்படுவதால் உடலுக்கு தூக்கம் தவிர்க்க முடியாதது. ஆனால், எந்த நிலையில் தூங்கினால் உடல்நலனுக்கும் மனநலனுக்கும் நல்லது என்பது முக்கியமானது. உங்களுடைய முதுகெலும்பை சரியாக சீரமைக்கும் நிலையில் தூங்குவதன் மூலம் மட்டுமே தூக்கம் மேம்படும். உடலில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது. முதுகு படுக்கையில் படும்படி கிடைமட்டமாக படுத்துத் தூங்குவது முதுகெலும்பை சரியான நிலையில் பராமரிக்கிறது. இது கீழ் முதுகு மற்றும் கழுத்துத் தசைகள் இரண்டையும் தளர்த்தும். இந்த நிலையில் தூங்குவது ஒரு நிம்மதியான தூக்கத்தைத் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மெல்லிய மெத்தை, தலையணையை உபயோகித்தால் தோள்பட்டை அல்லது கழுத்து வலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

சோலார் சாலைகள் : இனி மின்சாரம் தயாரிப்பு ரொம்ப ஈஸி

சோலார் சாலைகள். பெயருக்கு ஏற்றார்போல சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்கும் சாலைகள்தான். இவற்றில் சாலையின் மீது சோலார் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மீது உடையாத கொரில்லா கிளாஸ் அமைக்கப்படும். இவை சோலார் சாலை என்பதை குறிப்பிடும் வகையில் மத்தியில் ஒளிரும் ரெப்ளெக்டர்கள் மூலம் இதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் பல்வேறு அடையாளங்களையும் இதில் குறித்து வைத்துக் கொள்ளலாம். மேலும் இவை லேசான அளவில் வெப்பத்தை உமிழ்வது போல அமைக்கப்படுவதால், இதன் மீது படியும் பனி கரைந்து ஓடி விடும். இதில் எளிதாக நடந்து செல்லவும், வாகனங்களிலும் செல்லலாம். மேலும் சேதமடைந்து விட்டால் உடனே மாற்றி விடுவதும் எளிது.

ஹோலோகிராபிக் வழிகாட்டி : இனி காரில் ஜாலியாக செல்லலாம்

முன்பெல்லாம் காரில் பயணம் சென்றால் ஒவ்வொரு ஊரிலும் தகவலை கேட்டு கேட்டு செல்ல வேண்டும். பின்னர் சாலை அடையாள பலகைகளை கொண்டு ஓரளவுக்கு பயணித்தோம். அதன் பின்னர் தொலைபேசி, செல்போன்கள் உதவின. அதைத் தொடர்ந்து தற்போது ஜிபிஎஸ் கருவிகள் வந்து விட்டன. இருந்த போதிலும் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கடினம். தற்போது ஓட்டுநர்களின் கவலையை போக்க வந்து விட்டது ஹோலோகிராஃபிக் வழிகாட்டி. இதன் மூலம் முன்புற கண்ணாடியில் ஜிபிஎஸ் வரைபடங்கள் ஒளி ஊடுருவம் தன்மையுடன் கூடிய ஹோலோ கிராஃபிக் படங்களாக தெரியும். இதனால் ஓட்டுபவருக்கும் காட்சி பாதிக்காது. செல்லும் வழியையும் சட்டென்று புரிந்து கொள்ள இயலும். வெகு விரைவில் உலகின் வாகன பயணத்தை மாற்றி அமைக்க வந்து விட்டது ஹோலோகிராஃபிக் வழிகாட்டி. இது தொழில் நுட்பத்தின் ஆச்சரியம் தானே..

இனி மவுஸ் வேண்டாம் - வந்து விட்டது ஸ்மார்ட் ரிங்

இன்றைக்கு கம்பியூட்டர் துறையில் எவ்வளவோ வளர்ந்து விட்ட போதிலும் சில விஷயங்களில் கொஞ்சம் முன்னகராமலேயே இருந்து வந்தோம். ஆனால் இந்த புதிய நூற்றாண்டு எல்லாவற்றையும் மாற்றி வருகிறது. அதில் லேப்டாப், டேப்லட்  போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு மவுஸ் பயன்பாடு என்பது எவ்வளவு தேவை என்பதை உணர்ந்திருப்பார்கள். டச் பேட் இருந்த போதிலும் கூடவே ஒரு மவுசையும் பையில் வைத்து எடுத்து செல்வர். இனி அந்த கவலை வேண்டாம்.. வந்து விட்டது மவுசுக்கு பதிலாக ஸ்மார்ட் ரிங். இதை ஆள்காட்டி விரலில் மாட்டிக் கொண்டு வழக்கமாக மவுசை பயன்படுத்துவது போல ஆட்டிக் கொண்டிருந்தால் போதும்... லேப்டாப்பில், டேப்லட்டில் அவ்வளவு ஏன் கணிணியில் கூட ஜாலியாக வேலை பார்க்கலாம். இனி  எலி வாலில் தலைகீழாக தொங்குவதை போல மவுஸ் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை.. இந்த ரிங் போதும். தேவைப்படாத போது டிராயரில் போட்டு பூட்டி விட்டு ஜாலியாக செல்லலாம். தேவைப்படும் போது சட்டை பையிலோ.. விரலிலோ மாட்டிக் கொண்டு செல்லலாம்.

விரைவில் வருகிறது பறக்கும் பைக் - இனி அபார்ட்மெண்டில் பார்க்கிங் சண்டை வராது

நகரங்களில் வசிப்பவர்களின் மிகப் பெரிய பிரச்னை எது என்று கேட்டால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதுதான். இதில் எத்தனை படித்தவர்களாக இருந்தாலும் பார்க்கிங் பிரச்னையை தீர்த்து வைக்க தனி நாட்டாண்மை தான் எப்போதும் வர வேண்டியிருக்கும். போதாக்குறைக்கு வண்டிகளை மாற்றி மாற்றி நிறுத்தி எடுத்து வைப்பதில் கேட் காவலர்களும் களைத்து போய் விடுவர். அபார்ட்மென்ட் கொஞ்சம் பெருசாக இருந்தால் போதும், வண்டியை எங்கே நிறுத்துவது, எப்படி நிறுத்துவது என்பதில் ஒரு இசை நாற்காலி போல பெரும் போட்டியே நடக்கும். இனி அதற்கெல்லாம் வேலையே இருக்காது. நீங்கள் எந்த தளத்தில் இருந்தாலும் அந்த தளத்துக்கு பறக்கும் பைக்கிலோ, காரிலோ போய் இறங்கி, அங்கேயே உங்கள் வீட்டின் பால்கனியில் பறக்கும் பைக் அல்லது காரை நிறுத்திக் கொள்ளலாம். இதனால் நகர நெரிசலில் சிக்கி அவதிப்படவோ, ஹார்ன் ஒலிகளால் தலை வீங்கி போகவோ வேண்டியதில்லை. ஒரு டிஜிட்டல் யுகம் நம் கண்முன்னே மாய உலகமாக மாறிக் கொண்டிருக்கிறது. நமது பேரப் பிள்ளைகள் சாலைகளில் வாகனங்கள் ஓடின என கேட்டால் சிரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.