முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
சந்திரனில் நில நடுக்கம் ஏற்படுவதை புகைப்படம் எடுத்த சந்திரயான் விண்கலம்

நமது பூமியில் நில நடுக்கம் ஏற்படும் என்பது நமக்கு தெரியும். பூமிக்கடியில் இருக்கும் டெக்டானிக் பிளேட் என்று அழைக்கப்படக் கூடிய பாறைத் திட்டுகள் நகரும் போது இது போன்ற நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.  இதே போல, சந்திரனின் மேற்பரப்பிலும் புவி அடுக்குகள் போல தட்டுகள் அமைந்திருப்பதும், அவை நகர்கின்ற போது நிலநடுக்கம் ஏற்படுவதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதில் குறிப்பாக இந்தியா அனுப்பிய சந்திரயான் இது தொடர்பான  படங்களை எடுத்து அனுப்பியுள்ளது என்றால் ஆச்சரியம் தானே...

விமானத்தில் சாப்பிடும் போது உணவின் ருசி குறைவாகத்தான் இருக்கும் ஏன் தெரியுமா?

நாம் வீடு மற்றும் வெளி இடங்களில் உண்பதை காட்டிலும், விமானத்தில் சாப்பிடும் உணவு சில நேரங்களில் உப்பு சப்பில்லாமல் இருப்பது போல நமக்கு தோன்றும். அதற்கு காரணம் விமானம் அதிக உயரத்தில் பறப்பதால், நுகர்வு திறனும், சுவை உணரும் திறனும் நமக்கு குறைவாக இருக்கும். எனவே, விமானத்தில் கொடுக்கப்படும் உணவுகளை நாம் சாப்பிடும் போது, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு போன்ற நான்கு சுவைகளை உணரும் சக்திகள் நமது நாவிற்கு குறைந்து விடுகிறது. விமானங்கள் பொதுவாக 31,000-40,000 அடி உயரத்தில் பறக்கின்றன. அப்போது, நம் நாக்கில் உள்ள சுவைக்கும் தன்மை குறைந்து விடும். ஒரு விமானம் காற்றடைக்கப்பட்ட ஒரு எந்திரம் ஆகும். ஆதலால், ஈரப்பதம் குறைந்து விடும். இதனால் நம் வாயில் உமிழ்நீர் குறைந்து சுவைக்கும் தன்மையும் குறைந்து விடும். இது உணவின் சுவை மாறுபடுவதில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி, குறைந்த காற்று அழுத்தம், விமானத்தில் செல்லும் போது ஏற்படும் இரைச்சல் மற்றும் ஈரப்பதம் இல்லாதது அனைத்தும் நாம் உணவை ருசிக்கும் விதத்தை பாதிக்கின்றன.

டால்பின்களை போர்களுக்கு பயன்படுத்துகின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக டால்பின்கள் கூடுதல் கூருணர்வு திறன் மிக்கவை. மேலும் மனிதர்களோடு நன்கு நெருங்கி பழகக் கூடியவை. சங்க காலத்தில் தமிழர்கள் யானைகளை போருக்கு பயன்படுத்தியது போல, தற்போது டால்பின்களை போர்களுக்கும், உளவுக்கும் பயன்படுத்துகின்றனர். அண்மையில் நீருக்கடியில் இருந்து நடக்கும் தாக்குதலில் இருந்து தனது கடற்படையை பாதுகாக்க கருங்கடலில் உள்ள தனது கடற்படை தளத்தில் பயிற்சி பெற்ற டால்பின்களை ரஷியா நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராணுவ நோக்கங்களுக்காக டால்பின்களுக்கு நன்கு பயிற்சி அளித்து உள்ளது ரஷியா . அவை பொருட்களை மீட்டெடுக்க மற்றும்  எதிரி டைவர்ஸைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவும் இதே போல் டால்பின்களுக்கு போர் பயிற்சி அளிக்கிறது.

அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ஹாலிவுட் படம் எது தெரியுமா?

உலகிலேயே அதிக பொருட்செலவில் படங்களை தயாரிக்கும் துறையாக அமெரிக்காவின் ஹாலிவுட் விளங்கி வருகிறது. இங்கு அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் எது தெரியுமா...நீங்கள் பல்வேறு படங்களை கற்பனை செய்தால் அதெல்லாம் குறைவாகத்தான் இருக்கும். பைரேட் ஆஃதி கரீபியன் என்ற திரைப்படம் தான் இதுவரை எடுக்கப்பட்ட படங்களிலேயே அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்துக்குகாக பட நிறுவனம் 375 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் மூவாயிரம் கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக ஹாலிவுட்டில் அதிக பொருள் செலவில் படம் எடுப்பற்கான பட்ஜெட் சுமார் ரூ.500 கோடி வரைதான் அதாவது 65 மில்லியன் டாலர் என்ற அளவில்தான் திட்டமிடப்படும். அப்படியானால் இந்த படத்தின் செலவை நினைத்து பாருங்கள்...ஆச்சரியமாக உள்ளது அல்லவா.

ஜெர்மன் சர்க்கஸ் கம்பெனியில் நிஜ விலங்குகளுக்கு பதிலாக ஹோலோகிராம் உருவங்கள்

தற்காலத்தில் உலகம் முழுவதும் மிருகவதைக்கு எதிரான விழிப்புணர்வும், கோஷங்களும் பெருகி வருகின்றன. அதிலும் குறிப்பாக சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் மிருகங்களை அடித்து வதைத்து பழக்கி அவற்றை சாகசம் செய்வதற்கு பல்வேறு நாடுகளிலும் கடுமையான தடை சட்டங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நவீன யுகம் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று வழியை கண்டுபிடித்து தந்து விடுகிறது. தற்போது புதிய தொழில் நுட்பமான ஹோலோகிராம் தொழில் நுட்பம் இதற்கும் கை கொடுக்கிறது. அசலான மிருகங்களுக்கு பதிலாக ஹோலோ கிராம் உருவங்களை அசலான மிருகங்களை போலவே உருவாக்கிர அவற்றை சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்ய ஜெர்மனி சர்க்கஸ் நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. அங்கு 2018 முதல் விலங்குகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஹோலோகிராம் 3டியில் குதிரை, மீன்கள், யானை உருவங்களை அசல் விலங்குகளுக்கு பதிலாக பயன்படுத்தி கூட்டத்தை ஈர்த்து வருகிறது.

உவ்வே... இனிமேலாவது புகையிலை பொருள்களை சாப்பிடாதீர்கள்

இந்தியாவில் தமிழகம் தவிர்த்து பெரும்பாலான வட மாநிலங்களில் பெரும்பான்மையோர் புகையிலை பொருள்களை பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு குறைந்த பட்ச லாகிரி வஸ்துவாக கருதப்படுகிறது. வட மாநிலங்களில் இரு பாலரும் இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருளை கேட்டால் இனி வாயில் வைக்கும் போதெல்லாம் அதன் நினைவு வரும். ஆம், நாம் கழிக்கும் சிறுநீரில் அதிகமாக யூரியா என்ற ரசாயனம் காணப்படுகிறது. இந்த யூரியாதான புகையிலை பொருள்களில் சுவையூட்டியாக சேர்க்கப்படுகிறதாம். இது தொடர்பாக மத்திய நோய் தடுப்பு கண்காணிப்பகமே அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. உவ்வே.. இனிமேலாவது புகையிலை பொருள்களை சாப்பிடாதீர்கள் மக்களே...