முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தண்டவாளத்தில் சரளைக்கற்கள் போடப்படுவது ஏன் தெரியுமா?

அதிக எடை கொண்ட ரயிலைத் தண்டவாளங்கள் தாங்குகின்றன. அவற்றை, அடிக்கட்டைகள் தாங்குகின்றன. முன்பெல்லாம் மரத்தால் ஆன அடிக்கட்டைகள் பயன்படுத்தப் பட்டன. தற்போது கான்கிரீட்டால் செய்யப்பட்ட அடிக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. தண்டவாளத்தின் மேல் ரயில் செல்லும்போது நிலைப்புத்தன்மையை உண்டாக்குவதற்காக, சரளைக் கற்களை நிரப்பி வைக்கிறார்கள். உருண்டையான அல்லது வழவழப்பான கற்கள் என்றால், ரயிலின் வேகத்தால் ஏற்படும் அதிர்வில் உருண்டு ஓடிவிடும். மாறாக கூர்மையான விளிம்புகளுடைய சரளைக் கற்கள், ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பிணைத்துக்கொள்கின்றன. இதனால் நிலைப்புத்தன்மை நன்றாகக் கிடைக்கிறது. ரயில் செல்லும்போது சரளைக் கற்களும் உருண்டு ஓடுவதில்லை. சரளைக் கற்களுக்கு மேல் சற்று உயரமாகத் தண்டவாளம் அமைக்கப்படுவதால், மண் மூடும் வாய்ப்பும் இல்லை. மழையால் தண்ணீரும் தேங்குவதில்லை. செடி, கொடிகளும் முளைப்பதில்லை. அதனால்தான் தண்டவாளத்தில் சரளைக் கற்களைப் போடப்படுகின்றன.

ஆண்களுக்கு அதிகம்

அதிக உடல் எடை காரணமாக திடீரென மரணம் ஏற்படும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கு 3 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலின் எடை சராசரியாக இருக்கும் வரையில் எந்த பிரச்னையும் எழுவதில்லை. ஆனால் அதையும் தாண்டி உடல் எடை, அதிகரிக்க, அதிகரிக்க பக்க விளைவுகளும் அதிகரிக்கும். உலகம் முழுவதும் 40 மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் அதிக உடல் பருமான மக்கள் சாதாரண எடையில் உள்ளவர்களைவிட மூன்று வருடங்கள் முன்னதாகாவே உயிரிழ்ந்து விடுவதாக கூறப்பட்டுள்ளது.இதேபோல், வயது முதிர்ச்சிக்கு முன்பே அகால மரணம் ஏற்பட அதிக உடல் எடை காரணமாக அமைகிறது என்றும், இந்த ஆபத்து பெண்களைவிட ஆண்களுக்கு மூன்று மடங்கு அதிகம் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிகப்படியான எடையுள்ள மக்கள் தங்கள் ஆயுட் காலத்தில் 10 வருடங்களை இழப்பதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

உலகை ஆளும்

செல்போன் போன்ற கையடக்கக் கருவிகளில், தொடுதிரையைத் தாங்கி வெளியான முதல் செல்போன் என்ற பெருமையுடன் ஸ்டீவ் ஜாப்ஸால் ஆப்பிள் ஐபோன் 2007ம் ஆண்டு அறிமுகமானது. ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மூலம் உலகையே மாற்ற முடியும் என்று பத்தே ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் நிரூபித்துள்ளது

30 ஆண்டுகளாக...

அமெரிக்காவை சேர்ந்த கார்ல் பாடன் (64) என்பவர் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் செல்போன்கள் வருவதற்கு முன்பே ‘செல்பி’ எடுக்க தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளாக ‘செல்பி’ எடுத்து வருகிறார். முதலில் சாதாரண 35 எம்.எம். கேமராவில் டிரைபோட் மற்றும் சாதாரண வெளிச்சத்தில் செல்பி எடுத்தார்.

ஆண்களின் குணம்

ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள். இதன்மூலம், தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க முடியும் என நம்புகின்றனர். எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. புத்திசாலித்தனத்துடன் இருக்கும் பெண்களை பெரிதும் விரும்புவர்.

அதிக நேரம் அல்ல, 3 ஆண்டுகள் தூங்கும் உயிரினம் எது தெரியுமா?

அதிக நேரம் தூங்கும் உயிரினம் எது என்று கேட்டவுடன் நமக்கு கும்பகர்ணன் நினைவுக்கு வரும். அதெல்லாம் கதைக்குத்தான், மனிதனால் 6 மாதம் எல்லாம் தூங்க இயலாது. அது கிடக்கட்டும். கரடியின் குளிர்காலத் தூக்கம் ரொம்ப பிரபலமானது. உணவின்றி சுமார் 8 மாதங்கள் வரை கரடி கும்பகர்ணத் தூக்கம் போடுவதுண்டு. பாறைகளுக்கு இடையே, மரப்பொந்துகளில் எனப் பாதுகாப்பாகக் கரடிகள் தூங்கும். இதில் சாம்பியன் கரடி என்று நீங்கள் நினைத்தால் தவறு.. அது குட்டியூண்டு நத்தை தான். இவை 3 ஆண்டுகள் வரை தூங்குமாம். சில பாலைவன நத்தைகள் தரைக்கடியில் குழி தோண்டி அதில் மூன்று வருடங்கள் வரை கூட தூங்குகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago