முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இந்த பல்லி புதுசு

பெருவில் புதிய பல்லி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அதன் தேசிய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய பல்லி இனம் லியோலேமஸ் வார்ஜண்டே(Liolaemus warjantay) என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது அந்நாட்டு மலையான பெருவியன் ஆண்டிஸில் 4,500 மீட்டர் அதாவது 14,700 அடி உயரத்தில் வாழ்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பெருவின் அரேக்விபாவில் உள்ள கோட்டாஹுவாசி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை பல்லியான லியோலெமஸ் வர்ஜண்டே, லியோலெமஸ் இனத்தைச் சேர்ந்தவை. இதில் 280 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனப் பிரிவுகள் உள்ளன. இப்பல்லி கண்டுபிடிக்கப்பட்ட பகுதி 4, 90,550 ஹெக்டேர் பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை கொண்டதாகும்.. பல்லிக்கு பின்னால் இத்தனை பெரிய விஷயமா... அடேங்கப்பா..

கடலுக்கு அடியில் முட்டையை உடைத்தால் என்ன ஆகும்

முட்டையை நாம் நிலத்தின் மீது உடைத்தால் அது அப்படியே உடைந்து கலைந்து போவதை நம்மால் காண முடியும். அதே வேளையில் கடலுக்கு அடியில் உடைத்தால் என்ன ஆகும் தெரியுமா... கடலுக்கு அடியில் சுமார் 18 மீட்டர் அல்லது 60 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டாலே அங்கு அழுத்தம் அதிகரித்து காணப்படும். அது வெளிப்புறத்தில் காணப்படுவதை காட்டிலும் 2.8 மடங்கு கூடுதலான அழுத்தத்துடன் இருக்கும். இங்கு ஒரு முட்டையை உடைத்தால் அழுத்தம் காரணமாக அது கலைந்து போகாமல் ஒரு ஜெல்லி மீனைப் போல காட்சி அளிக்கும் என்பது ஆச்சரியம் தானே..

அமிர்தம் போன்ற சுவை

இந்து மதத்தில் சிவ பெருமானை துதிக்கும் பக்தர்கள் சைவர்கள் என்றும் திருமாலை தொழுபவர்கள் வைணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். வைணர்கள் தங்களது இஷ்ட தெய்வமான மதுரை கள்ளழகர் போன்ற தெய்வங்கள் திரு உலா வரும் போது அவர்களை வரவேற்கும் விதமாக அக்கார வடிசல் என்ற ஒரு இனிமையான பிரசாத்தை உருவாக்குவார்கள். தூய தமிழில் அக்காரம் என்பது இனிப்பை குறிக்கும் வெல்லத்திற்கான பெயராகும். இந்த வெல்லத்தை பயன்படுத்தி தயாரிக்கும் அக்கார வடிசல் பிரசாதம், நெய், முந்திரி, திராட்சை போட்டு நன்றாக குழையும் வகையில் அரிசியை தண்ணீருக்கு பதிலாக பாலை சுண்ட காய்ச்சி அதில் போட்டு குழைவாக வடிப்பார்கள். இந்த அக்கார வடிசல் சுவை அமிர்தமாக இருக்கும்.

அத்திப்பழம் மகிமை

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றுகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.  தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.  மலச்சிக்கல் போகும்.

கோபுரத்தின் நிழல் தலைகீழாக தெரியும் அதிசய கோயில்

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் பண்டைய கட்டிட கலைக்கு சாட்சியமாக விளங்குபவை கோயில்கள். அதிலும் இன்று வரையிலும் பல்வேறு விற்பன்னர்களாலும் அவிழ்க்க முடியாத கட்டிட கலை நுட்பங்களை அவை தங்களுக்குள் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் விருபாட்சர் கோயிலாகும். இக்கோயிலில் அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா.. எப்படி தஞ்சை பெரிய கோயிலில் கோபுரத்தின் நிழல் கீழே விழாதோ... அதே போலு இந்த கோபுரத்தின் நிழல் கிழே விழும்போது தலைகீழாக தெரியும். அதாவது ஒரு லென்ஸ் வழியாக கோபுரத்தை படம் பிடித்தால் எப்படி தலைகீழாக காட்சி அளிக்குமோ அது போல அதன் நிழல் அங்குள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கோபுரத்தின் தலை கீழாக விழுவதை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம். எந்த ஒரு இடை ஊடகமும் இல்லாமல் நிழல் தலைகீழாக மாற என்ன காரணம்?  இதுவரை யாருக்கு புரியாத புதிராக உள்ளது இந்த மர்மம்.

நீருக்கடியில் இருக்கும் நீச்சல் வீரர்களுக்கும் உடல் வியர்க்கும் என்பது உங்களுக்கு

உடலின் சூட்டை தணிப்பதற்காக குளிர்வித்துக் கொள்ளும் உயிரியல் செயல்பாடாக வியர்ப்பது நடைபெறுகிறது. நாம் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் போது உடலில் வியர்வை சுரப்பிகள் வேலை செய்து உடல் வியர்வையை வெளியிடுகின்றன. நீச்சல் போட்டியில் ஈடுபடும் நீச்சல் வீரர்கள் தண்ணீருக்குள் பல மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அப்போது அவர்களுக்கும் வியர்க்கும். ஆனால் வியர்வையை நீர் கழுவி கரைத்து விடுவதால் அவர்களால் அதை உணர முடிவதில்லை. நீருக்கு அடியிலும் உடலுக்கு வியர்க்கும் என்பது ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago