முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தேவை முன்னெச்சரிக்கை

இளம் வயதில் தொண்டைப் புண்ணோ, கை, கால் மூட்டுக்களில் வீக்கமோ, ருமாட்டிக் காய்ச்சலோ வந்தால், அவை இதயத்தைப் பாதிக்கலாம். வருடம் ஒரு முறை ரத்தக் கொழுப்பு, சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இசிஜியும் செய்து பார்க்கலாம். குடும்பத்தில் இளவயது மாரடைப்பால் பாதிக்கப்பட்டோர் இருப்பின், மற்ற நபர்கள், 25 வயதிலிருந்தே, இந்த வருடாந்திர சோதனைகளை ஆரம்பிக்கலாம்.

அதிசய சிறுமி

வங்கதேசத்தை சேர்ந்த சோய்டி கதூன் என்ற குழந்தை 3 காலுடன் பிறந்தது. இடுப்புடன் இணைந்த 3-வது கால் இருந்ததால் நடக்க முடியாமல் சிரமப்பட்ட அந்த சிறுமிக்கு ஆஸ்திரேலியாவின் மோனாஷ் சிறுவர்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் சோய்டியால் நடக்கவும், ஓடவும் முடிகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சற்று புதுமையானது

விஞ்ஞானிகள் பாம்பினை அடிப்படையாகக் கொண்ட ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். வளரக்கூடியதாகவும், வளைவு நெளிவுடன் உண்மையான பாம்பினை போன்று தோற்றமளிக்கும் இந்த ரோபோ மணிக்கு 35 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும், 100 கி எடையுடையது. இந்த பாம்பு ரோபோ, பேரழிவு அல்லது அவசர கால நேரத்தில் அதிகம் பயன்படுமாம்.

கொசுக்களை அழிக்க

உயிர் அறிவியல் தொழில் நுட்ப துறையான 'வெரிலி' உதவியுடன் தற்போது 20 மில்லியன் ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து பறக்கவிடப் போகின்றது கூகுள் நிறுவனம். வால்பாஷியா பாக்டீரியா மூலம் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் ஆண் கொசுக்களை உருவாக்கி அதை வெளியே அனுப்ப உள்ளனர். இந்த ஆண் கொசுக்களுடன் சேரும் பெண் கொசுக்கள் போடும் முட்டைகள், புதிய கொசுக்களை உருவாக்கும் தன்மை அற்றது.

மூக்கின் நுகர்வு திறன்

மனித புலன்களில் பார்வை மங்கிப்போனால், அதைச் சரி செய்துகொள்ள கண்ணாடி போட்டுக் கொள்ளலாம். காது கேட்கும் திறன் குறைந்தால், ஹியரிங் எய்ட் வைத்துக் கொள்ளலாம். ஆனால், முகர்வுத் திறனை மேம்படுத்திக் கொள்ள அப்படி எந்தத் தொழில்நுட்பமும் இல்லையா என உங்களைப் போல எனக்கும் கேள்வி எழுந்தது. அதற்கும் பதில் தொழில்நுட்ப வடிவில் வந்துவிட்டது. ஷக் மெக்கின்லி என்ற பொறியாளர் / கண்டுபிடிப்பாளரின் முயற்சியில் உருவாகியிருக்கும் முகர்வு ரேஞ்சர் (Nasal Ranger) பார்ப்பதற்கு பைனாகுலர் போலவே இருக்கும் இந்த உபகரணம் நம்மைச் சுற்றியிருக்கும் வாசனை வடிவத்தை மேம்படுத்தி ஆல்ஃபேக்டரிக்கு அனுப்புவதன் மூலம் மெல்லிய வாசனைகளையும் கண்டறிந்து சேமித்துக் கொள்ளப் பயன்படுகிறது. உணவுப் பொருள் உற்பத்தி, வாசனைத்திரவிய உருவாக்கம், சுவாசிக்கும் காற்றின் தரம் போன்ற பல பிரிவுகளில் மேற்படி உபகரணம் உதவியாக இருக்கும்.

ஆஸ்கர் விருது பின்னணி

உலக அளவில் சினிமாத் துறையில் சாதித்த கலைஞர்களுக்கு போர்வீரன் சிலை வழங்கப்படுகிறது. இந்த வழக்கம் 1929ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. இந்த சிலையை லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சேர்ந்த சிற்பி ஜார்ஜ் ஸ்டேன்லி வடிமைத்துள்ளார். வெண்கலத்தால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்படும் இந்த விருதுகள் 13.5 இன்ச் உயரமும், 8.5 பவுண்ட் எடையும் கொண்டது. 2-ம் உலகப்போரின் போது வெண்கலத்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் 3 ஆண்டுகள் பிளாஸ்டரில் தயாரிக்கப்பட்டு வர்ணம் தீட்டி விருதுகள் வழங்கப்பட்டன. போர் முடிந்த பின்னர் அந்த விருதுகளை தங்க முலாம் பூசப்பட்ட விருதுகளாக ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பு மாற்றிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago