முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆனந்த கண்ணீர்

பிரபலமான எமோஜி எது என்று கண்டுபிடிக்க, உலகம் முழுவதும் உள்ள 212 நாடுகளைச் சேர்ந்த 40 லட்சம் ஸ்மார்ட்போன்களில் உள்ள 427 மில்லியன் குறுஞ்செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், ஆனந்த கண்ணீருடன் இருக்கும் முகம் போன்ற எமோஜி உலகில் அதிகம் பேர் பயன்படுத்திய பாப்புலரான எமோஜியாகத் தேர்வு செய்யப்பட்டது.

நிலவு சுற்றுலா

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு சுற்றுலா செல்ல 2 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது அடுத்த ஆண்டு மேற்கொள்ளப் படுகிறது. நிலவுக்கு மனிதர்கள் சுற்றுலா செல்வது இதுவே முதல் முறை ஆகும். சுற்றுலா பயணிகள் இருவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் காப்சியூல் மூலம் நிலவுக்கு செல்லவுள்ளனர்.

சூப்பர் ஃபாஸ்ட்

பூம் நிறுவனம் உருவாக்கியுள்ள சூப்பர்சோனிக் எக்ஸ்பி1 விமானம் ஒலியையே மிஞ்சும் விமானமாம். மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ள இதில் விமானி அறை தவிர்த்து, 44 பேர் பயணிக்கலாம். உதாரணத்திற்கு, நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு பயணிக்க 7 மணி நேரம் எனில், இவ்விமானத்தில் 3.5 மணிநேரம் பயணித்து விடலாம். லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சிட்னிக்கு செல்ல 15 மணி நேரமாகிறது என்றால் சூப்பர் சோனிக் எக்ஸ் பி1 மூலம் 6.45 மணி நேரத்தில் சென்று விடலாம். சூப்பர் சோனிக் விமானத்திற்கு முன்பு அந்த இடத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது கான்கார்டு விமானம்தான்.

பிபிசி தமிழோசை

76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி சேவையை நிறுத்துவதாக பிபிசி அறிவித்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் வானொலி சேவைகள் ஆதரவை இழந்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரகத்தை பாதுகாக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.  வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களாவது சாப்பிடுவது அவசியம்.  காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டு நன்கு வேகவைத்து, நீரை வடித்துவிட்டு சாப்பிட வேண்டும்.

இங்கிலாந்துக்கு ஆங்கிலம் எப்போது வந்தது தெரியுமா?

ஆங்கிலத்தின் தாயகம் இங்கிலாந்து என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சுமார் 300 ஆண்டு காலம் இங்கிலாந்தை ஆட்சி செய்தது பிரெஞ்சு மொழிதான். 1066 க்கும் 1362 க்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்தில் ஆட்சி மொழியாக பிரெஞ்சுதான் இருந்தது. 1066 இல் வில்லியம் தலைமையிலான நார்மன் ஆட்சி வந்த போது, ஆங்கிலோ- நார்மன் பிரெஞ்சு மொழியை அறிமுகப்படுத்தினார். இந்த மொழியை பிரபுக்கள், அரசு உயர் அதிகாரிகள், செல்வந்தர்கள் ஆகியோர் பேசி வந்தனர். அவர்களில் ஒரு சிலருக்கு ஆங்கிலம் பேசக் கூட தெரியாது. பின்னர் 1362 இல் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தை ஆட்சி மொழி ஆக்கும் சட்டம் இயற்றப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக நார்மன் பிரெஞ்சு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் சாமானிய மக்களுக்கு நீதி மன்றத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago