முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பையோனிக் தோல்

இன்றைய நவீன யுகத்தில் மனிதர்களைப் போன்றே உணர்வுகள் கொண்ட ரோபோக்களை கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ரோபோக்களின் கை, கால்களில் மனிதனை போன்று தொடு உணர்ச்சியை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 3டி அச்சிடப்பட்ட தொடுதிரை சென்சார்களை பயன்படுத்தி, 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் பியோனிக் தோலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ரோபோக்களுக்கு தொடுதல் உணர்ச்சியை கொடுத்துள்ளனர், மினசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர். 4 அடுக்குகளை கொண்ட, 3D பிரின்டர் பயன்படுத்தி மின்னணு உணர்ச்சி கொண்ட ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர். வருங்காலத்தில் உணர்வுகளுடன் சுயமாக சிந்திக்கும் திறனையும் ரோபோக்கள் பெற்று மனிதனின் மறு உருவமாக ஜொலிக்கும் என்பதே ஆராய்ச்சிகளின் கருத்து.

விண்வெளி ஆபத்து

விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் வளர்சிதை மாற்றத்தால், அவர்களின் எலும்புகளின் அடர்த்தி குறையும். மேலும், எலும்புகள் கரைந்து அவர்களின் சிறுநீர் வழியாக வெளியேறும் என்பதால், அதை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார். பூமிக்குத் திரும்பியவுடன் அந்த சிறுநீர் பல்வேறு ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

பெருகும் ஆதரவு

குறைந்த இணைய வேகமான 2ஜியைப் பயன்படுத்துவோர் ஃபேஸ்புக்கை எளிதாக பயன்படுத்த தொடங்கப்பட்டதுதான்  ஃபேஸ்புக் லைட். 50க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படும் இது, இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் இதை பயன்படுத்துகிறார்கள்.

தேபெஸ் என்ற பழங்கால நகரம் எங்குள்ளது

தேபெஸ் என்ற கிரேக்க பெயருடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்படி பெயருள்ள ஒரு பழங்கால நகரம் எகிப்தில் காணப்பட்டது. அதில் கிமு 3200 முதல் மக்கள் வசித்து வந்தனர். உலகிலேயே மக்கள் வசித்து வந்த பழமையான நகரங்களில் இதுதான் முதன்மையானது என்கின்றனர். தற்போது இந்த நகரம் லக்சார் என அறியப்படுகிறது.இங்குள்ள கர்நாக் என்ற பழமையான கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில் இன்றும் வரலாற்று சின்னங்கள் உள்ளன. பண்டைய காலத்தில் எகிப்தியர்களின் வாடிகனை போல தேபெஸ் விளங்கியது என்றால் ஆச்சரியம் தானே...

உலகிலேயே விலை உயர்ந்த மாம்பழம்

மத்திய பிரதேசத்தில் உலகின் அதிக விலை உயர்ந்த மாம்பழம் (Miyazaki Mango) கிடைக்கிறது. ஒரு கிலோ 2.70லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூரைச் சேர்ந்தவர் சங்கல்ப் பரிஹார். இவரது மனைவி ராணி. இவர்கள் தங்களுடைய தோட்டத்தில் மாம்பழ கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளனர்.  அதில் ஒரு மாமரக்கன்று ஜப்பானின் மியாசாகி மாம்பழங்களுக்கு சொந்தமானது. உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றாக அறியப்படும், ஜப்பானின் மியாசாகி மாம்பழங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன, அவை தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை விட அதிக அதிக விலைக்கு விற்பனையாகிறது. இந்த மியாசாகி மாம்பழத்தின் விலை கிலோ 2.7 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது.

வாடகைக்கு ரோபோ

ஜப்பானில் ஒரிக்ஸ் ரென்டெக் கார்ப்ரேஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ள யுமி எனப்படும் மனித ரோபோவை வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை, வீட்டு வேலை போன்றவற்றிற்கு வாடகைக்கு எடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு தரும் சம்பளத்தை விட ரோபோக்களுக்கு தரும் விலை சற்று குறைவு என்பதால் தானாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!