முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை

நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மரபணு மாற்றப்பட்ட பன்றியில் வளர்க்கப்பட்ட சிறுநீரகத்தை ஒரு மனித நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தி, அதை முழுமையான ஆற்றலுடன் இயங்கக்கூடிய வகையில் இணைத்து சாதனை படைத்துள்ளனர். பன்றியின் உடலில் வளர்க்கப்பட்ட சிறுநீரகம் இப்போது மனித உடலில் சாதாரணமாக வேலை செய்வதைக் கண்டறிந்துள்ளனர். உறுப்புகளில் கோளாறு ஏற்பட்டு, நோய்வாய்ப்படும் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முயற்சிதான் உடல் உறுப்பு மாற்றம் செய்யும் முறை. இது இப்போது வேறொரு முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது, உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கையை காட்டிலும், உறுப்பு மாற்றம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பற்றாக்குறை காரணமாகப் பலரும் உயிர் இழக்கின்றனர். இதற்கான தீர்வாக மரபணு மாற்ற முறைப்படி பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட உடல் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்திப் பயன்படுத்தலாம் என்ற முயற்சி முன்வைக்கப்பட்டது. அதன்படி, மூளைச்சாவு அடைந்த ஒரு மனிதரின் குடும்பத்தின் ஒப்புதலுடன், மருத்துவர்கள் பன்றியின் சிறுநீரகத்தை நோயாளிக்கு இணைத்து, அவரை வென்டிலேட்டரில் உயிருடன் வைத்து அசாதாரணமான சோதனையை மேற்கொண்டனர். அறுவைசிகிச்சைக்குப் பின்னர் சிறுநீரக செயல்பாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணித்தபோது அது எதிர்பார்த்ததை விட இயல்பாக செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரிப்பால் அளந்தவர்

சார்லி சாப்ளின், ஒரே வருடத்தில் 12 ஹாலிவுட் படங்கள் நடித்து சாதனை புரிந்தவர், நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன் முகம் கொண்டவர்.

ஒளிஉணர் விசைப்பலகை : அப்படின்னா..

இன்றைக்கு தொழில் நுட்பம் எங்கோ சென்று விட்டது. கணிப்பொறியின் வருகை தொழில் நுட்ப யுகத்தின் புதிய புரட்சி என்று கூட வர்ணிக்கலாம். இதுவரை இருந்து வந்த அனைத்து கைவினை கலைகளையும் மூட்டை கட்ட வைத்து கணிணி வரை கலை மூலம் புதிய கற்பனா உலகை கணிப்பொறி திறந்து விட்டுள்ளது.. அது சரி அதே நேரத்தில் கணிப்பொறி துறையும் தன்னை அதோடு இணையாக வளர்த்துக் கொண்டுள்ளது. உதாரணமாக கணிப்பொறி என்றால் முன்பெல்லாம் பொதி மூட்டை போல பிக்சர் டியூப் மானிட்டர், மிகப் பெரிய மேசை சைசுக்கு சிபியு, தட்டச்சு எந்திரம் மாதிரியான விசைப்பலகை என்ற காலம் மலையேறி விட்டது. தற்போது தொட்டால் உணரும் திரையுடன் மாடலிங் பெண்ணைப் போல மிகவும் ஸ்லிம்மாக மாறிவிட்டது. அதே போல வயர்லெஸ் மவுஸ், கீ போர்டு என அடுத்தடுத்த வரவுகள் அசத்தி வருகின்றன. இதில் மேலும் ஒரு படி முன்னேற்றமாக ஒளியுணர் விசைப்பலகைகள் (லேசர் கீ போர்டுகள்) வந்து விட்டன. ஒரு சிறிய ஒளியை டேபிளில் பாய்ச்சினால் கீ போர்டு வடிவில் தெரியும் வெளிச்சத்தில் தொட்டால் திரையில் தானாகவே செயல்பாடுகள் நடக்கும் வகையில் இந்த புதிய லேசர் விசைப்பலகை வந்து விட்டது. இனி எங்கு சென்றாலும் கீபோர்டை சுமந்து செல்ல வேண்டியதில்லை.. நம்மூர் பொடிடப்பா அளவுக்கு உள்ள அந்த லேசர் விளக்கு போதும்.. விலையும் மலிவுதான்.. ஆன்லைன் ஸ்டோரில் வகைவகையாக அள்ளலாம்..

ஏரோமொபில்

விரைவில் அறிமுகமாகவுள்ள ஏரோமொபில் எனும் புதிய பறக்கும் கார், வானிலும் சாலையிலும் பயணிக்கும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 5 அடி நீளம் கொண்ட இந்தப் பறக்கும் காரில், இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கலாம். சாலையில் செல்லும்போது 310 மைல்கள் வரை பயணிக்குமாம்.

உலகின் மிகப் பெரிய காளை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சியானினா என்ற காளை இனம் தான் தற்போது வரையிலும் உலகிலேயே வீடுகளில் வளர்க்கப்படும் காளைகளில் மிகப் பெரிய காளை இனமாக அறியப்பட்டுள்ளது. உயரத்திலும் எடையிலும் இவை மெகா சைஸ். தொடக்கத்தில் இவை இத்தாலியில் வளர்க்கப்பட்டன. பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு பரவின. இவற்றின் எடை சுமார் 1700 கிலோ. தொடக்கத்தில் இறைச்சிக்காக இவை வளர்க்கப்பட்டன. 2 ஆம் உலகப் போருக்கு பிறகு இது உலகம் முழுவதும் பரவலான இனமாக மாறியது. பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

64 ஆண்டுகளுக்கு பின்...

உலகில் வாழும் அரிய வகை பாம்புகளில் ஒன்று தொண்டை சுருக்கு பாம்பு. இந்த அரிய வகை பாம்புகள் பிரேசில் காடுகளில் யார் கண்களுக்கு படாமல் உயிர்வாழ்ந்து வந்தது. இந்நிலையில், அரிய வகை தொண்டை சுருக்கு பாம்பு ஒன்று 64 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாம்பு ஒரு பெண் இனம். பாம்பின் நீளம் 1.7 மீட்டர். எடை 1.5 கிலோகிராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago