முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரூ. 714 கோடியாம்

மறைந்த ஓவியர் ஷான் மிஷெல் பாஸ்கியா வரைந்த அந்த ஓவியம், நியூயார்க்கில் பிரபல ஏல நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு மண்டையோடு வடிவத்தைக் கொண்ட முகத்தை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. இந்த ஓவியம், 110.5 மில்லியன் டாலர் களுக்கு விற்பனையானது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 714 கோடி ரூபாய். இதை ஜப்பானைச் சேர்ந்த தொழில்முனைவர் வாங்கியுள்ளார். ஓவியர் ஷான் மிஷெலின் முந்தைய ஓவியத்தைக் காட்டிலும் இது கிட்டத்தட்ட இருமடங்கு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. தற்போது ஓவியத்தை ஏலத்தில் எடுத்தவர்தான் ஓர் ஆண்டுக்குமுன், ஷான் மிஷெலின் அந்த ஓவியத்தையும் விலைக்கு வாங்கினார். அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் வரைந்து விற்பனையான படைப்புகளிலேயே இது மிகவும் அதிக விலைக்குப் போனதாம்.

1908 ஒலிம்பிக் போட்டிக்கு ரஷ்யா 12 நாள்கள் தாமதமாக வந்தது ஏன் தெரியுமா?

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜூலியஸ் சீசர் ஆண்டுக்கு 365 நாட்கள் என கணக்கிடப்பட்ட காலண்டரை பயன்படுத்த உத்தரவிட்டிருந்தான்.  இது லீப் வருடங்கள் உள்ளிட்ட பல்வேறு கால கணித மாறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் Pope Gregory XIII கால கட்டத்தில் 1582 முதல் கிறித்துவ நாடுகள் கிரிகோரியன் காலண்டர் எனப்படும் நவீன காலமுறைக்கு மாறின. ஆனால் கிறித்துவம் அல்லாத பல நாடுகளும், ரஷ்யா  போன்ற நாடுகளும் அவற்றை ஏற்கவில்லை. இதனால் 1802 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு ரஷ்யா 12 நாட்கள் தாமதமாக வரும்படி நேர்ந்தது.  அதன் பின்னர் போல்ஷெவிக் ஆட்சியின் போது 1918 இல் ரஷ்யாவும் கிரிகோரியன் முறைக்கு மாறியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால், ஒலிம்பிக் பிறந்த தேசமான கிரீஸ் 1923 இல்தான் புதிய காலண்டர் முறைக்கு மாறியது என்பதுதான் சுவாரசியம்.

எறும்புகளின் மொத்த எடை மனிதனை விட அதிகம் என்றால் நம்ப முடிகிறதா?

ஒரு சின்ன எறும்புதானே என எதையும் அலட்சியமாக கருதக் கூடாது. உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்பது நமது முன்னோர் வாக்கு. அப்படி பார்த்தால் மிக சிறிய உயிரினங்களான எறும்புகள், மிகப் பெரிய மனிதர்களை காட்டிலும் பூமி பந்தில் அதிகம் வாழ்கின்றன. பூமியில் சுமார் 7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார் என்றால், எறும்புகளின் எண்ணிக்கையோ 100 டிரில்லியனுக்கும் அதிகம். உலகில் உள்ள அனைத்து எறும்புகளின் மொத்த எடையையும் கணக்கிட்டால் மனிதர்களின் மொத்த எடையை காட்டிலும் அதிகமாக இருக்கும். 

விநோத வழக்கம்

உலகின் 28வது பெரிய சாம்ராஜ்யமான ரோம் சாம்ராஜ்யத்தில் பல விநோதமான பழக்கவழக்கங்கள் இருந்தன. துணிகளை துவைக்க, பண்டைய ரோம் நாகரீகத்தில் சிறுநீரை பயன்படுத்தினர். மேலும், பற்களை வெள்ளை ஆக்கவும் ரோமானியர்கள் இதை பயன்படுத்தினர். அழகை மேம்படுத்த பெண்கள், கிளாடியேட்டர்களின் வியர்வையை பயன்படுத்தினர்.

காற்றில் இருந்து

சிலியில் இயங்கும் ஒரு நிறுவனம், காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. பிரஷ் வாட்டர் எனப் பெயிடப்பட்டிருக்கும் இந்த இயந்திரம், ஈரப்பதமான காற்றை குளிர்வித்து வடிகட்டி குடிநீராக மாற்றுகிறது. இந்த கருவி பாலைவனங்களில், மலைப் பகுதிகளில் பேருதவியாக இருக்குமாம்.

சன்ஸ்கிரீன் ஆபத்து

சூரிய ஒளியில் நடமாடுவதன் மூலம் வைட்டமின் டி உடலில் உற்பத்தியாகிறது. சூரிய ஒளியில் நேரம் செலவு செய்வதை நிறுத்தியதாலும், சன்ஸ்கிரீன் அதிகமாக பயன்படுத்துவதாலும் உலகின் பெரும்பாலான மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் உலகில் 1 பில்லியன் மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அல்லது போதுமான வைட்டமின் டி இல்லாததால் பலவித தீவிரமான தோல் நோய்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. மக்கள் சூரிய ஒளியில் குறைந்த நேரம் செலவிடுவதாலும், அப்படியே வெளியில் சென்றாலும் சன்ஸ்கிரீன் பூசிக்கொண்டு போவதாலும், உடலில் வைட்டமின் டி உற்பத்தியாவது தடைபடுவதோடு புற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறதாம். செல் வளர்ச்சி, நோய் எதிர்ப்புசக்தி, நரப்பு தசை வளர்ச்சி மற்றும் உடலில் கட்டிகளை குறைப்பது போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளில் வைட்டமின் டி பங்காற்றுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago