முக்கிய செய்திகள்
உலகில் அவசியம் பார்க்க வேண்டிய 4 ஆச்சரியம் அளிக்கும் இடங்கள்..! 4 amazing tourist spots in the world
2 hours 31 min ago
Sunions | உரித்தால் கண்ணில் கண்ணீர் வராத வெங்காயம் அறிமுகம். Tearless Onion
2 hours 31 min ago
இனி சேலையை அடுக்கி வைக்க பீரோ வேண்டாம் தீப்பெட்டி போதும் | Match box saree
8 hours 58 min ago
இனி சேலையை அடுக்கி வைக்க பீரோ வேண்டாம் தீப்பெட்டி போதும் | Match box saree
8 hours 58 min ago
மம்மியை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் ஸ்கேன் செய்த விஞ்ஞானிகள்..! Scientists uncover mummy
1 day 9 hours ago
Mercedes Benz Vision EQXX | ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ பயணம் செய்யும் மின்சார கார்.
1 day 9 hours ago
வானவில் கிராமம் | முதியவரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி..! Rainbow Village
1 day 9 hours ago
நாய்களின் சொர்க்கம் எனப்படும் கிராமம் எங்குள்ளது தெரியுமா..? Dog shelter in Costa rica
1 day 9 hours ago
கந்து வட்டி கும்பலிடம் சிக்கிக்கொண்டால் மீள்வது எப்படி?|பறி கொடுத்த சொத்துக்களை மீட்கும் வழிமுறைகள்
1 day 9 hours ago
ஆளி விதை 11 மருத்துவ குணங்கள்| Flaxseeds11 health benefits|ரவிச்சந்திரன் சித்த மருத்துவர்
3 days 7 hours ago
வீரர்களை பறக்கவிட்ட காளை சூறாவளி குட்டை | Kaalai Valarpu Interview |
3 days 8 hours ago
கலர் மாறும் வித்தியாசமான Smart Phone | VIVO V23 5G Full Review in Tamil |
3 days 8 hours ago
முத்துக்காளை என்று பேர் சொல்லி அழைத்தால் உடனே அருகில் வரும் | Kaalai Valarpu Interview |
5 days 7 hours ago
வீட்டின் வடக்கு,வடகிழக்கு திசை எவ்வாறு அமைந்து இருக்க வேண்டும் |North North East In Vastu
5 days 8 hours ago
வாடி வாசலில் தாவி குதிச்சு நல்லா விளையாடுவான்..! Kaalai Valarpu Interview |
6 days 8 hours ago
குண்டு குழந்தை

குண்டாக இருக்கும் குழந்தைகள் தான், ஆரோக்கியமான குழந்தைகள் என நினைப்பது தவறு. குழந்தை பிறந்த பின், ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால், எடை அதிகரிக்காது. தாய்ப்பால் மட்டும் கொடுத்து, 10 கிலோ எடை இருந்தாலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.

கழுவி பயன்படுத்தலாம்

ரஃப்ரீ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய மாடல் ஸ்மார்ட் போனை சோப்பு போட்டு கழுவி சுத்தப்படுத்தலாம். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோசெரா என்ற நிறுவனம் இந்த புதிய வகை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சூடான தண்ணீரில் கூட ஸ்மார்ட் போனை சுத்தபடுத்தலாம். இந்த மொபைல் நௌவ்கட் இயங்கு தளத்தில் இயங்கும்.

தேனின் மகத்துவம்

நல்ல தேனை கண்டுப்பிடிக்க, ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விடவும். தண்ணீரில் அது கரைந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது. அதேபோல், சுத்தமான காட்டன் துணியை தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பிக்கும் போது சுடர்விட்டு எரிந்தால் அது சுத்தமானது.

இதயம் அறிவோம்

அரை கிலோ கிராமுக்கு எடை குறைவான உறுப்புதான் இதயம். இதன் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது, இதய தசைகளுக்கு ரத்தம் கிடைக்காததனால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவே, இதற்கு பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்ரோன் அவர்களை மாரடைப்பில் இருந்து பாதுகாப்பதால்தான்.

தெரியாத பகுதி

லத்தீன் மொழியில் ஆஸ்திரேலிஸ் என்றால் தெற்கில் உள்ள தெரியாத பகுதி என்று பொருள். பண்டைய ரோமானியர்கள் வாழ்ந்த காலத்தில் ஆஸ்திரேலியா சென்றடைய வழி கண்டறியப்படாத காரணத்தாலும், கடல் வழி தெரியாததாலும் இப்பெயர் வைத்தனர். ஆஸ்திரேலிஸ் என்பது காலப்போக்கில் ஆஸ்திரேலியா என்றானது.

விநோத திருமணம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர் என்ற பெண் பீட்சாவின் மேல் உள்ள விருப்பத்தால், அதை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி திருமண கோலத்தில் ஆடையை உடுத்திக்கொண்டு, பீட்சாவுக்கும் டை கட்டி மாப்பிள்ளை போன்று அலங்கரித்துள்ளார். இதன் பின்னர் பீட்சாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, எனக்கு திருமணம் நடந்துவிட்டது, ஆண்களே என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.  இதனைப்பார்த்த புகைப்படக் கலைஞர் ஒருவர் போட்டோ ஷீட் ஒன்றினையும் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இது போல் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த  2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

வழிகாட்டும் வரைபடம்

உலக சுகாதார அமைப்பின் படி உலகில் மொத்தம் 28.5 கோடி பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இந்தியாவில்தான் அதிக பார்வையற்றோர் இருக்கிறார்களாம். இந்நிலையில் உலகின் முதல் முறையாக பார்வையிழந்தோருக்கென வரைபடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தை, பார்வையற்றோர் உணர முடியும். கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மொத்தம் 84 பக்கம் கொண்ட வரைபடம் A-3 வகை காகிதம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடம் உருவாக்குவதற்கான திட்டப்பணிகள் 1997 ஆம் ஆண்டு துவங்கி தற்சமயம் நிறைவுற்றிருக்கிறது. முதற்கட்டமாக ஆங்கிலம் மட்டுமில்லாமல் பெங்காலி, குஜராத்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

அழகை மேம்படுத்தும்

பார்வைத்திறன் மேம்படவும், அழகுக்காகவும், கண்ணாடி அணிவதை விரும்பாதவர்கள், கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர். இதை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அணிவதே நல்லது. கான்டாக்ட் லென்ஸ் அணிவதன் மூலம் மிகத் துல்லியமான பக்கவாட்டுப் பார்வையைப் பெற முடியும்.

சூரிய குளியல்

சூரிய குளியலால் உடலுக்கு வைட்டமின் 'டி' அதிகம் கிடைப்பதால், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறதாம்.  வைட்டமின் 'டி' குறைபாடினால் வளர்சிதை நோய் உருவாகிறது. இத்தகைய வளர்சிதை நோயினால்தான் நீரிழிவு, இருதய நோய்கள் ஏற்படுகின்றன.

சாப்பிடும் போது...

சுவாசக்குழாய் திறந்தால்தான் ஒருவரால் பேசமுடியும். நாம் பேசிக்கொண்டே சாப்பிடும்போது சுவாசக்குழாய் திறப்பதால், இதற்குள் உணவுப்பொருள் நுழையும் ஆபத்து அதிகம். அதை வெளியேற்ற நடக்கும் செயல்தான் புரையேறுதல். எனவே சாப்பிடும் போது பேசுவதை தவிர்ப்பதே நல்லது.

நம்பர் ஒன்

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ்.  அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரராக இவர் ஆக உள்ளார். 2௦16-ம் ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலர். 2009-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 11% உயர்ந்து வருகிறது.

விரைவில் பேச

குறித்த காலத்தில் பேசாத குழந்தைகளை உடனடியாக பேச வைக்க, குழந்தையை அனைவருடனும் பழக விட வேண்டுமாம். இதன்மூலம், குழந்தை மற்றவர்களிடம் பேசுவதன் அவசியத்தை ஏற்படுத்த முடியும். நல்ல சங்கீதம் மற்றும் பாடல்களை கேட்க செய்வதன் மூலமும் அவர்கள் விரைவில் பேச கற்று கொள்கிறார்களாம்.