பல் துலக்கும் பற்பசை பிளாஸ்டிக் டியூப்களில் அடைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் இன்றைக்கு உலகமே தத்தளித்து வருகிறது. எனவே இதற்கு மாற்றாக கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் காகித கேப்ஸ்யூல்களை கண்டு பிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இதில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். அதை வாயில் போட்டு ஒரு கடி... அவ்வளவுதான் கேப்ஸ்யூல் கரைந்து விடும்.. பற்பசை வாயில் நிரம்ப.. ஃப்ரெஷ்ஷால் பல் துலக்க வேண்டியதுதான்... வெகு விரைவில் இந்தியாவுக்கு வரும்.. இனி பற்பசைக்கான பிளாஸ்டிக் தேவையில்லை..
![]() 2 days 12 hours ago |
![]() 2 days 12 hours ago |
2 days 12 hours ago |
![]() 2 days 12 hours ago |
![]() 2 days 12 hours ago |
![]() 2 days 12 hours ago |
இந்தியாவின் முதல் சினிமா "ராஜா ஹரிச்சந்திரா" என்ற படம் 1913ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி கருப்பு வெள்ளையில் வெளியானது. இது ஒரு மெளனப் படம். 40 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தவர் தாதா சாகிப் பால்கே. முதன் முதலில் மும்பையில் கோரோனேசன் சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா:. இப்படம் இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி இயக்கி அவரது இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்திருந்தது. தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆர். நடராஜ முதலியார் என்பவரால் தயாரிக்கப்பட்ட "கீசக வதம்" என்ற மெளனப்படம், அவரது புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் 1916 இல் வெளியிடப்பட்டது. தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்". இதுவும் 1931 இல் வெளியானது. எச்.எம் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியிருந்தார். இதன் மூலம் முதல் தமிழ் படத்தின் பாடலாசிரியர் என்ற பெருமைக்குரியவரானார்.
பொதுவாகவே ஒரு சிலையை வடிக்கவே பல மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் மலையின் மீது மிக பிரமாண்டமான சிற்பங்களை வடிப்பது என்றால்... எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்... சீனாவின் ஹெனான் மாகாணத்தில் லுவோயாங்கிற்கு தெற்கே 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு புத்த குகை வளாகமான லாங்மென் க்ரோட்டோஸ் பண்டைய சீன சிற்ப கலையின் நேர்த்தியான பிரதிநிதித்துவத்தை எடுத்து சொல்கிறது. இங்கு மிகப் பெரிய புத்தர் சிலை 57 அடி உயரத்தில் உள்ளது. இப்பகுதியில் எழுத்துக்கள், சிற்பங்கள் பொறிக்கப்பட்ட கற்கள் 2,500 (ஸ்டெலாக்கள்), ஸ்தூபி வடிவிலான 60 பகோடாக்களும் உள்ளன. அவற்றில் பழமையானதும் மிகப்பெரியதும் குயங்டாங் ஆகும். இவற்றின் கட்டுமானம் 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேரரசர் சியாவோன் ஆட்சியில் தொடங்கியது. வெய் வம்சம் இந்த சிற்பங்களை உருவாக்கியுள்ளது. . பேரரசர் சியாவோன் புத்த மதத்தை தீவிரமாக பின்பற்றியுள்ளார். வெய் வம்சத்திற்குப் பிறகு, டாங் மற்றும் சாங் உள்பட தொடர்ச்சியாக ஆறு வம்சங்கள் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குகைகளில் சிற்பங்கள் செதுக்குவது தொடர்ந்துள்ளது. கேட்கவே ஆச்சரியமாக உள்ளதல்லவா... இதை 2000 ஆவது ஆண்டில் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.
நவீன அறிவியலில் கலிலியோவுக்கு முக்கியமான இடம் உண்டு. வானியலின் தந்தை என்று போற்றப்படுபவர். சூரியன்தான் பூமியை சுற்றி வருகிறது என நெடுங்காலமாக நம்பப்பட்டு வந்த நிலையில், பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்பது உள்பட சூரிய மண்டலம் குறித்த பல்வேறு உண்மைகளை 15 ஆம் நூற்றாண்டிலேயே உலகுக்கு அளித்தவர். இதற்காக வாடிகன் திருச்சபையால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மன உளைச்சல் மற்றும் கண்பார்வை இழந்து 1642 ஆம் ஆண்டு அவரது வீட்டிலேயே உயிரிழந்தார். அதன் பின்னர் 100 ஆண்டுகள் கழித்து 1737 இல் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக தாவரங்களைத்தான் விலங்குகளும், பூச்சிகளும், புழுக்களும் சாப்பிடும். ஆனால் புழு, பூச்சிகளை சாப்பிடும் தாவரங்களும் இருக்கின்றன என்பது ஆச்சரியம் தானே.. ஆனால் உண்மைதான். Carnivorous plant என்ற தாவரம் ஊனுண்ணி வகையைச் சேர்ந்தது. அதான் விலங்குகளை விரும்பி உண்ணக் கூடியது. இவை பெரும்பாலும் பூச்சிகளையும், ஊர்வனவற்றையுமே குறி வைக்கின்றன. இதற்காகவே இவை சிறப்பான வடிவமைப்பை பெற்றுள்ளன. இதன் இலைகள் அருகில் வரும் பூச்சிகளை அப்படியே லபக் கென்று கவ்வி பிடித்து மூடிக் கொள்கின்றன. அதன் பின்னர் அதில் சுரக்கும் ஒரு வகை திரவம் அப்படியே பூச்சிகளை தின்று செரிக்க உதவுகின்றன. பெரும்பாலும் மண்ணில் நைட்ரசன் சத்து குறைவாக உள்ள சதுப்பு நிலங்களிலேயே இவை அதிகம் காணப்படுகின்றன. ஆகவே பூச்சிகளை விழுங்கி அதன் உடலில் உள்ள புரதத்தில் கலந்திருக்கும் நைட்ரசனை உறிஞ்சி விடுகின்றன.. நம்மூர்களில் இல்லை எனவே நாம் பயப்படத் தேவையில்லை..
நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆப்பிள் பழங்கள் வாங்கும் போது அவற்றில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அது எதற்காக என யாருக்கும் தெரியாது. அது என்ன? இதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் ஒளிந்துள்ளன.PLU code (price lookup number) எனப்படும் இதை வைத்து தான் அந்த ஆப்பிள் ரசாயன உரங்களில் விளைவிக்கப்பட்டதா, மரபணு மாற்றம் செய்யப்பட்டதா, இயற்கை உரத்தில் விளைந்ததா என்பதை அறிய இயலும். இதை எப்படி தெரிந்து கொள்வது.. அதில் 4 இலக்க எண் இருந்தால் ரசாயன உரத்தால் ஆனது, ஐந்து இலக்க எண் 8 இல் தொடங்கினால் அது மரபணு மாற்றப்பட்டது. ஐந்திலக்க எண் 9 இல் தொடங்கினால் முழுக்க இயற்கையானது. இனி ஆப்பிளை பார்த்து வாங்குவீர்கள் தானே...
சித்த மருத்துவ குறிப்புக்கள்
கேரட் லட்டு
18 hours 4 min ago |
KFC Style பிரைடு சிக்கன்
4 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்
1 week 1 day ago |
பக்காலா மீன் வறுவல்
1 week 4 days ago |
பாசி பருப்பு பாயாசம்
2 weeks 13 hours ago |
தந்தூரி சிக்கன்
2 weeks 4 days ago |