Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அறிவோம் சிறுநீரகம்

சிறுநீர் பாதையில் அழற்சி என்பது மருத்துவ துறையில் பொதுவாக காணப்படும் ஒரு குறியீடு. மூத்திரம் வரும் பாதையிலும், சில நேரம் மூத்திர பையிலும் அழற்சி ஏற்படலாம். இதற்கு சிஸ்டைடிஸ் என்று பெயர். இந்த அழற்சி கிருமி தொற்று மேலே சென்று சிறுநீரகத்தை தாக்கும் போது அது செயலிழக்க வாய்ப்பு அதிகம்.

கூகுள் எர்த்தில் நெட்டிசனிடம் சிக்கிய சுமார் 425 அடி நீளமுள்ள பாம்பு எலும்பு கூடு

நமது புராணங்களில் ஆதிசேஷன், காளிங்கன், வாசுகி என ஏராளமான பாம்புகளை பற்றிய குறிப்புகள் உள்ளன. இவை உருவத்திலும், அளவிலும் மிகவும் பிரமாண்டமானவை. அதே போல அறிவியலிலும் அழிந்து போன உயிரினங்கள் பட்டியலில் சுமார் 40 அடிக்கும் மேலான நீளமுள்ள டைட்டானோவா வகை பாம்புகள் பற்றி குறிப்பிடப்படுகின்றன. இந்நிலையில் அண்மையில் நெட்டிசன் ஒருவர் கூகுள் எர்த் வழியாக பார்த்த போது பிரான்ஸ் நாட்டின் கடற்கரை ஒன்றில் சுமார் 400 அடி நீளமுள்ள பாம்பு எலும்புக்கூடு கிடப்பதாக பதிவிட்டிருந்தார். இது டைட்டானோவாவா என நெட்டிசன்கள் அதிகமாக  பகிர்ந்து விவாதித்தனர். இறுதியில் பிரான்சில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற Estuaire ஓவிய கண்காட்சிக்காக சீனாவை சேர்ந்த ஓவியர் ஹூவாங் யோங் பிங் என்பவர் 425 அடி நீளத்தில் உருவாக்கி கடற்கரையில் அமைத்திருந்த பாம்பு எலும்புக்கூடு சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

தானியங்கி சைக்கிள்

தானியங்கி கார்கள் தயாரிப்பில் வெற்றியடைந்துள்ள கூகுள் நிறுவனம் விரைவில் தானியங்கி சைக்கிள்களை நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் அறிமுகம் செய்யவுள்ளது. தானாக ஓட்டும் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த சைக்கிள்களால் பொருளாதாரம் முன்னேறுமாம்.

மோட்டார் வீடு

எலிசியம் என்ற பெயரிடப்பட்டுள்ள நகரும் சொகுசு வீடு ஒன்றை 45 அடி நீளம், 8 அடி அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் இல்லத்தின் உள்பகுதியில் அமர்வதற்கான பெரிய அளவிலான சோஃபா மற்றும் படுக்கை வசதி, 75 இன்ச் திரையுடன் கூடிய எல்.இ.டி டிவி பொருத்தப்பட்டிருக்கிறது. இங்கு அனைத்தும் சென்சார் சுவிட்சுகள் கொண்டதாக இருக்கிறது. இரண்டு பேர் தங்குவதற்கான சொகுசு படுக்கை வசதியுடன் ஒரு அறையும் உள்ளது.

பரங்கி மலை : தெரிந்ததும் தெரியாததும்

பரங்கி மலை இந்தியாவின் பழமையான வரலாற்று சின்னங்களில் ஒன்று. இந்திய நிலவியல் வரை படத்தை தயாரித்த ஆங்கிலேயர்கள் இந்த மலையிலிருந்துதான் இமய மலையை அளவு எடுத்தார்கள் என வரலாறு சொல்கிறது. கடல் மட்டத்தில் இலிருந்து 300 அடி உயரமுள்ள இந்த மலையில்தான் செயிண்ட் தாமஸ் செதுக்கிய கற்சிலுவை ஒன்று இங்கு இன்றும் புழகத்தில் உள்ளது. ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான தாமஸ் கேரளா வழியே சாந்தோம் வந்து அங்கிருந்து சைதாப்பேட்டை சின்னமலைக்கு இடம்பெயர்ந்து இறுதியாக இந்த மலைக்கு வந்து சேர்ந்ததாக கிறிஸ்துவ பெருமக்கள் நம்புகிறார்கள். இந்த மலைக்குச் செல்வதற்கு, 135 படிக்கட்டுகளைக் கொண்ட பாதையை ஆர்மீனியர்கள் அமைத்தனர். புனித தோமையரின் சிறு எலும்புத் துண்டு ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோல 12 திருத்தூதர்களின் திருப்பண்டங்கள் (எலும்புத் துண்டு, சதைத் துண்டு உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள்) உட்பட 124 புனிதர்களின் திருப்பண்டங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மிக முக்கியமாக, புனித லூக்காவினால் கி.பி.50-ம் ஆண்டு வரையப்பட்டு, தோமையரால் இம்மலைக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் அன்னை மரியாவின் ஓவியமும் இங்கு பாதுகாக்கப்படுகிறது.

மூட்டுகள் பலப்பட

எலும்பு மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், முதலில் சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். அழற்சி எதிர்ப்பு உணவுகளான ஆலிவ் ஆயில், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வைட்டமின் மற்றும் கனிமச்சத்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago