உலகம் முழுவதும் நாகரிகமடைந்த மனிதர்கள் ஆடைகளை அணிய தொடங்கினர். அதுவும் தற்போது டிசைன் டிசைனாக ஆடைகளை அணிந்து தள்ளுகிறோம். உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறோம். நாம் அணியும் ஆடைகள் மட்கி போக எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் எவ்வளவு தெரியுமா...40 ஆண்டு காலம் ஆகுமாம். பெரும்பாலான உடைகள் சாயங்களாலும், ரசாயனங்களாலுமே நிறமேற்றப்படுவதால் அவை நிலத்தை விஷமாக்குகின்றன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இன்றைக்கு பெரும்பாலான பொருள்கள் கண்ணாடியால் செய்யப்படுகின்றன. ஆனால் பண்டைய காலத்தில் முகம் பார்ப்பதற்கு கண்ணாடியாக விளங்கியது எது தெரியுமா.. ஒரு அடர் வண்ணம் கொண்ட பாத்திரத்தில் மிகவும் அசையாத வகையில் நிரப்பப்பட்ட நீரிலேயே அக்கால மக்கள் தங்கள் முகங்களை பார்க்க பயன்படுத்தி வந்தனர். இதுவே முதன் முதலில் கண்ணாடியாக பயன்பட்ட பொருளாகும். இன்றைக்கும் பழைய கோயில்களில் நாம் கண்ணா.டி கிணறு என்பதை கேள்விப்பட்டிருப்போம் அல்லவா.. அதேப் போலத்தான்.
தூக்கம் வராமல் தவிப்போருக்கு தீர்வாக இப்போது ரோபோ தலையணை வந்துள்ளது. சோம்நாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, மூச்சுவிடுவதை சீராகக் கண்காணித்து, தூக்கத்தை சீராக்குகிறது. மேலும் இது சுவாசத்தைக் கட்டுப்படுத்தி அமைதியான, ஆழமான தூக்கம் வர செய்யும். பாதியில் எழுந்தால்கூட இந்த தலையணை தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறதுதான் ஆச்சரியம்.
மனித உடலில் தோலின் செயல்பாடு குறித்து நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் பல சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளது. அதில் குறிப்காக, மனிதர்களின் உடலில் ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட தோல் உதவுவதுதான் என்பது. முதலில் இந்த சோதனையை ஒரு சுண்டெலியின் மீது நடத்தப்பட்டது. மிக குறைந்த அளவிலான ஆக்சிஜன் உள்ள இடத்திலும், அதிக அளவிலும், மிதமான அளவிலும் ஆக்சிஜன் உள்ள இடங்களிலும் வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் மூலம், ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட தோல் உதவுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மூலம் மனிதர்களின் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை சீராக வைப்பதில் தோலின் பங்கு மிக முக்கியம் என்பது தெரிய வந்துள்ளது.
இருதய பிரச்னைகளை கண்டறிய சோனோகிராம் உள்ளிட்ட கருவிகள் தற்போது மருத்துமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வயர்களும், டிஜிட்டல் திரைகளும், அதன் ஒலியையும் பார்த்தாலே, கேட்டாலே நன்றாக இருப்பவர்களுக்கும் இதயம் சரியில்லையோ என்று அச்சப்பட வைக்கும் மிகப் பெரியதாக இருக்கும். போதாதென்று அவற்றை கையாள தனி குளிரூட்டப்பட்ட அறைகள் அல்லது தனி லேப்கள் என அதை விவரித்துக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் விடிவு காலம் இல்லையா என்று ஏங்குபவர்களுக்காகவே வந்து விட்டது கையடக்க சோனோகிராம் கருவி. அதன் பெயர் கேப்ஷன் ஏஐ. ஆண்டுதோறும் இதய நோயால் 14 லட்சம் பேர் இறப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இனி இதை எங்கும் எடுத்து செல்லலாம் என்பதால் மாரடைப்புக்கு குட்பை.
பூகோளத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் ச.கி.மீ. பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகள் வரை நீண்டிருக்கும் இதை ஒரு நாடாக கருதினால், பரப்பளவில் இது 9-வது இடத்தைப் பிடிக்கும். இதில் 6,400 கி.மீ. தூரமுள்ள நதி ஓடுகிறது. நீளமான நதிகளின் பட்டியலில் அமேசான் நதி 2-ம் இடத்தில் உள்ளது. 40 ஆயிரம் தாவர இனங்கள், 3 ஆயிரம் மீன் இனங்கள், 400க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் இங்கு வசிக்கின்றன. அமேசான் மழைக்காடுகளால் தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்போட்ட பறவை இனங்களும், 25 லட்சம் வகை பூச்சிகளுக்கும் அமேசான் காடுகள்தான் வாழ்விடமாக இருக்கின்றன. உலகில் 3 டி.செ வெப்பநிலை அதிகரிப்பால் இந்த காடு தற்போது அழிவை எதிர்நோக்கியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


