சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் மங்கோலிய பேரரசரான குப்லாய்கானின் ( Kublai Khan) ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சூவன்லிசௌ(shuan Chou) துறைமுக நகரில் உள்ள இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீன பேரரசரின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ஆம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் பேரரசனான செங்கிஸ்கானின் பேரனாவான். மங்கோலிய பேரரசர்கள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
![]() 3 days 18 hours ago |
![]() 6 days 9 hours ago |
![]() 6 days 9 hours ago |
![]() 6 days 9 hours ago |
![]() 6 days 9 hours ago |
![]() 6 days 9 hours ago |
பெரும்பாலும், மின்னல் தாக்குதலுக்கு பலியானவர்கள் மரங்களின் அடியில் தஞ்சம் புகுந்தவர்கள்தான். இது ‘சைட் ஃபிளாஷ்' என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு அருகில் ஒரு உயரமான பொருளை மின்னல் தாக்கும்போது, அங்கே இருக்கும் பாதிக்கப்பட்டவருக்கு தாக்குதல் பரவுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். மின்னல் தாக்குதலினால் 2019 ஜூலை 25 முதல் 31 வரை அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் நடந்ததாகவும் . வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதிகளில் அதிகப்படியாக மின்னல் தாக்குதல்கள் நடந்தன என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகத்துல மொத்தம் சுமார், 1,500 எரிமலைகள் தொடர்ந்து (பல வருடங்களாக) தீக்குழம்பைக் கக்கிக்கிட்டே இருக்குதாம். எரிமலையின் பியூமீஸ் என்னும் பாறை மட்டுமே தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. சூப்பர் எரிமலைகள் எனப்படுபவை வெடித்துச் சிதறும்போது,பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தீமழை பொழிவதோடு, பருவநிலை மாற்றங்களையும் உருவாக்கும் தன்மை கொண்டவையாம். இத்தகைய ஒரு எரிமலை, அமெரிக்காவின் யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் இருக்கிறதாம். இது வெடிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். உலகின் மிகப் பயங்கரமான எரிமலை, இந்தோனேஷியாவின் சும்பாவா (Sumbava)தீவில் உள்ள, டாம்போரா(Tambora) மலையில்தான் வெடித்ததாம். 1815 ஆம் ஆண்டு வெடித்துச் சிதறிய இந்த எரிமலைக்கு, ஒரு லட்சம் மக்கள் பலியானார்களாம்! அந்நாட்டில் சுமார் 76 எரிமலைகள் இருக்கின்றன என்கிறது ஒருஆய்வு. ஐஸ்லாந்து நாடு, எரிமலைகளின் மேலேதான் உட்கார்ந்து இருக்கிறதாம். எரிமலைகள் வளரும் தன்மையுடையனவாம்! உலகின் மிகப்பெரிய எரிமலை ஹவாயின் “மாய்னா லோவா (Mauna Loa)”.
ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு, சர்க்கரையை வாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!
சீனாவில் சாலையில் வரையப்பட்டுள்ள கோட்டின் மீது மணிக்கு 70 கி.மீ. வரை வேகத்தில் செல்லும் உலகின் முதல் ஸ்மார்ட் ரெயில் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்து பயணத்தை தொடங்கி உள்ளது. ஏ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் இந்த ரெயில் மூன்று பெட்டிகளை கொண்டுள்ளது. இதில் 300 பேர் பயணம் செய்யலாம். மற்ற ரெயில் அல்லது டிராம் போக்குவரத்திற்கு ஆகும் செலவை விட குறைந்த அளவான தொகையே இதற்கு செலவாகிறது. தற்சமயம் ஹூனான் மாகாணம் சுஜோவ் நகரில் நான்கு நிலையங்களை கொண்ட 3.1 கி.மீ. தொலைவிற்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, ரெயில் இயக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் முக்கிய சாலைகளில் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நௌலியின் ஆசனத்தை செய்து வருவதால் வயிற்றை சார்ந்த முதுகெலும்பின் பாகங்கள், அதைச்சார்ந்த நரம்புக்கூட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும். நரம்புகள் பலம் பெறுவதால் உடல் வலுவடையும். குடல் வாயு, வயிற்று கோளாறுகள், வாயில் துர்நாற்றம் உள்பட பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ தட்சிண நௌலி உறுதுணையாக இருக்கும்.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() 1 month 1 week ago |
![]() 1 month 3 weeks ago |
![]() 2 months 19 hours ago |
![]() 2 months 1 week ago |
![]() 2 months 1 week ago |
![]() 2 months 4 weeks ago |
பொரி உப்புமா
3 days 12 hours ago |
கடாய் வெஜிடபிள்
5 days 15 hours ago |
தக்காளி ரசம்
1 week 2 days ago |
தக்காளி ரசம்
1 week 2 days ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு
1 week 5 days ago |
தக்காளி சட்னி
2 weeks 2 days ago |